ஜெயிலர் இசை வெளியீட்டில் அனிருத்தை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்... ட்ரெண்டிங் வீடியோ இதோ!

ஜெயிலர் இசை வெளியீட்டில் அனிருத்துக்கு முத்தம் கொடுத்த ரஜினிகாந்த்,Super star rajinikanth kissed anirudh at jailer movie audio launch | Galatta

பிரம்மாண்டமாக நடந்து முடிந்த ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் அனிருத் அவர்களை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களுக்கும் சூப்பர் ஸ்டாராக விளங்கும் ரஜினிகாந்த் அவர்களின் அடுத்த பக்கா ஆக்சன் திரைப்படமாக வரவிருக்கிறது ஜெயிலர் திரைப்படம். முன்னதாக கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் முதல்முறையாக ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தான் ஜெயிலர். சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன் முன்னணி வேடத்தில் நடிக்கும்,ஜெயிலர் படத்தில் நடிகை தமன்னாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் தரமணி & ராக்கி படங்களின் நடிகர் வசந்த் ரவி, யோகி பாபு, மலையாள விநாயகன் உட்பட பலர் நடிக்கின்றனர். இதுபோக மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ஜெயிலர் திரைப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில், நிர்மல் படத்தொகுப்பு செய்ய, அனிருத் இசையமைக்கிறார். ஜெயிலர் திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிறைவடைந்ததது. இயக்குனர் நெல்சனின் தனி ஸ்டைலில் டார்க் காமெடி மற்றும் அதிரடி ஆக்சன் கலந்த பக்கா எண்டர்டெய்னர் படமாக ஜெயிலர் திரைப்படம் இருக்கும் என ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ஜெயிலர் படம்  ரிலீஸாகவுள்ளது. ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று ஜூலை  28ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தயாரிப்பாளர் கலாநிதி மாறன், இயக்குனர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத், மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன் உட்பட படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.  

மேலும் தமிழ் சினிமாவை சார்ந்த முன்னணி பிரபலங்கள் பலரும் கலந்து கொண்ட இந்த பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழாவில் “காவாலா” பாடலுக்கு நடிகை தமன்னா நடனமாடி ரசிகர்களை மகிழ்வித்தார். வழக்கம்போல் தனது அட்டகாசமான பேச்சால் ஒட்டுமொத்த அரங்கத்தையும் அதிர வைத்தார் சூப்பர் ஸ்டார். இந்த நிலையில் இசை வெளியீட்டு விழா தொடங்குவதற்கு முன்பாக அரங்கத்திற்குள் மாஸான என்ட்ரி கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இயக்குனர் நெல்சன் அவர்களை இறுக்கமாக கட்டிப்பிடித்து தோலில் தட்டி கொடுத்தார். அதேபோல் இசையமைப்பாளர் அனிருத்தை கட்டி பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரது இரண்டு கன்னங்களிலும் முத்தமிட்டார். இசையமைப்பாளர் அனிருத்துக்கு ரஜினிகாந்த் முத்தமிட்ட இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில், “என்றென்றும் சூப்பர் ஸ்டார்” என குறிப்பிட்டு அந்த வீடியோவை பதிவிட்டிருக்கிறார். அந்த வீடியோ இதோ…
 

❤️❤️❤️ Forever

Superstar @rajinikanth 👑👑👑 pic.twitter.com/bUQo4BpAMZ

— Anirudh Ravichander (@anirudhofficial) July 28, 2023

சினிமா

"D50 - ஆயிரத்தில் ஒருவன் 2 - 7G ரெயின்போ காலனி 2.. இதில் எது?"- ரசிகர்கள் ஆர்வத்தை தூண்டிய செல்வராகவனின் Shooting Spot புகைப்படம் இதோ!

துல்கர் சல்மான் - ரித்திகா சிங்கின் துள்ளலான கலாட்டாகாரன் பாடல்… பிறந்த நாளுக்கு கிங் ஆஃப் கொத்தா படக்குழுவின் சூப்பர் ட்ரீட் இதோ!
சினிமா

துல்கர் சல்மான் - ரித்திகா சிங்கின் துள்ளலான கலாட்டாகாரன் பாடல்… பிறந்த நாளுக்கு கிங் ஆஃப் கொத்தா படக்குழுவின் சூப்பர் ட்ரீட் இதோ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அதிரடியான ஜெயிலர் பட ஸ்பெஷல் பேக்கேஜ்… அனைத்து பாடல்களும் கொண்ட கலக்கலான JUKEBOX இதோ!
சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அதிரடியான ஜெயிலர் பட ஸ்பெஷல் பேக்கேஜ்… அனைத்து பாடல்களும் கொண்ட கலக்கலான JUKEBOX இதோ!