பிரபல நடிகை ஷோபனா வீட்டில் திருட்டு..! விசாரணையில் வெளிவந்த உண்மை.. – விவரம் உள்ளே..

நடிகை ஷோபனா வீட்டில் திருடிய பணிப்பெண் விவரம் உள்ளே - Maid stole 40 thousand money from Actress shobana house | Galatta

கடந்த 1984 ல் தமிழில் கமல் ஹாசன் நடிப்பில் வெளிவந்த எனக்குள் ஒருவன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமான இவர் தொடர்ந்து பல முக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். அதன்படி காதல் கீதம், இது நம்ம ஆளு, என்கிட்டே மோததே, தளபதி போன்ற படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்த இவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த் , கமல் ஹாசன் , விஜயகாந்த், பாக்யராஜ்  ஆகியோர் படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவரானார். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து வந்தார்.கிட்டத்தட்ட 200க்கும் மேல் திரைப்படங்களில் நடித்த இவர் நடிகையாக மட்டுமல்லாமல் பரதநாட்டிய கலைஞராகவும் புகழ் பெற்றவர்.  இவர் தமிழை விட மலையாள திரையுலகில் கொடி கட்டி பறந்தவர் குறிப்பிடத்தக்கது. நடிகை மட்டுமல்லாமல் சமீப காலமாக திரைப்படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டு சென்னை தேனாம்பேட்டை சீனிவாச சாலையில் தனது தாயார் ஆனந்தத்துடன் வசித்து வருகிறார்.

மூன்றடுக்கு கொண்ட இவரது வீட்டின் முதல் தளத்தில் ஷோபனாவின் தாயார்  ஆனந்தம் வசித்து வர, இரண்டாம் தளத்தில் நடிகை ஷோபனா இருந்து வருகிறார்.மேலும் அவரது வீட்டிலே பரத நாட்டிய வகுப்புகளையும் நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களாக தனது தாயார் வசித்து வரும் வீட்டில் பணம் சிறுக சிறுக காணாமல் போனது தெரியவந்தது. அதன்பின் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் இது குறித்து நடிகை ஷோபனா புகார் அளிக்க போலீஸ் விசாரணையை தொடங்கியது,

சந்தேகத்தின் பேரில் ஷோபனா வீட்டில் வேலை பார்த்து வந்த விஜயாவிடம் போலீஸ் விசாரிக்க விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது. கடந்த ஒரு வருடமாக நடிகை ஷோபனாவின் தாயார் வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்த விஜயா கடந்த மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை சிறுக சிறுக ரூ 41 ஆயிரம் திருடியது தெரியவந்துள்ளது. மேலும் திருடிய பணத்தை ஷோபனா வீட்டின் கார் ஓட்டுனர் முருகனிடம் கொடுத்து யுபிஐ செயலி மூலம் கடலூரில் உள்ள தனது மகளுக்கு அனுப்பியது விசாரணையில் அம்பலமானது. பின் வறுமையின் காரணமாக பணத்தை திருடியதாக குற்றத்தை ஒப்புக் கொண்ட விஜயா நடிகை ஷோபனா மற்றும் அவரது தாயாரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இதையடுத்து விஜயாவை மன்னித்து புகாரை திரும்ப பெற்றுக் கொண்டு மீண்டும் தனது வீட்டில் வேலை பார்க்க அனுமதித்துள்ளார் நடிகை ஷோபனா திருடிய பணத்தை சம்பளத்தில் பிடித்தம் செய்து கொள்வதாக போலீசாரிடம் நடிகை ஷோபனா தெரிவத்துள்ளார். இதையடுத்து நடிகை ஷோபனா வீட்டில் நடந்த நிகழ்வு திரைத்துறையில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

முன்னதாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் விஜய் யேசுதாஸ் ஆகியோர் வீட்டிலும் இது போன்ற சம்பவங்கள் நடந்தது குறிப்படத்தக்கது.  

 

 “எனக்கு இஷ்டமில்லைனு சொல்லும்போது ஒன்றும் செய்ய முடியாது” புரோமோஷன் நிகழ்சிகளில் நயன்தாரா பங்கேற்காதது குறித்து விஷால் கருத்து..!
சினிமா

“எனக்கு இஷ்டமில்லைனு சொல்லும்போது ஒன்றும் செய்ய முடியாது” புரோமோஷன் நிகழ்சிகளில் நயன்தாரா பங்கேற்காதது குறித்து விஷால் கருத்து..!

சினிமா

"மதுரை குலுங்க.. குலுங்க.." 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரிலீஸாகும் சசிகுமாரின் ‘சுப்ரமணியபுரம்’.. கொண்டாட்டதில் ரசிகர்கள்..

“ரொம்ப சந்தோஷமா இருக்கு.. அதே நேரத்தில்...” LGM படம் குறித்து ஹரிஷ் கல்யாண் பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரல்..
சினிமா

“ரொம்ப சந்தோஷமா இருக்கு.. அதே நேரத்தில்...” LGM படம் குறித்து ஹரிஷ் கல்யாண் பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரல்..