சமந்தா - வாரிசு தயாரிப்பாளர்  இணைந்த பிரம்மிப்பான படைப்பு… ரசிகர்களின் கவனம் ஈர்க்கும் ரொமான்டிக்கான GLIMPSE புதிய இதோ!

சமந்தாவின் சாகுந்தலம் பட ரிஷிவனம் தானே பாடல்,samantha in shaakuntalam movie rishivananthane song out now | Galatta

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர கதாநாயகிகள் ஒருவராக படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகை சமந்தா  தற்போது முதல் முறையாக ஹாலிவுட் களமிறங்கியுள்ளார் ஹாலிவுட் பிரபல இயக்குனர் ஃபிலிப் ஜான் இயக்கத்தில் அரேஞ்ச்மெண்ட்ஸ் ஆஃப் லவ் எனும் ஆங்கில படத்தில் நடிகை சமந்தா நடித்துள்ளார்.

தொடர்ந்து சமந்தா நடிப்பில் அடுத்தடுத்து வெளிவரும் திரைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. அந்த வகையில் முன்னதாக நடிகர் விஜய் தேவரகொண்டா உடன் இணைந்துள்ள சமந்தா ரொமான்டிக் காமெடி என்டர்டெய்னர் படமாக தயாராகும் குஷி திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

இதனிடையே இதிகாச கதாபாத்திரமான சகுந்தலா கதாபாத்திரத்தை மையப்படுத்தி இயக்குனர் குணசேகர் இயக்கத்தில் சமந்தா நடித்துள்ள திரைப்படம் சாகுந்தலம். குணா டீம் ஒர்க்ஸ் சார்பில், தயாரிப்பாளர் நீலிமா குணா தெலுங்கில்  தயாரித்துள்ள சாகுந்தலம் திரைப்படத்தில் நடிகை சமந்தா சகுந்தலா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் தேவ் மோகன், மோகன் பாபு, அதிதி பாலன், பிரகாஷ் ராஜ், கௌதமி ஆகியோர் சாகுந்தலம் திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சாகுந்தலம் திரைப்படத்திற்கு சேகர் வி ஜோசப் ஒளிப்பதிவு செய்ய, மணிசர்மா இசையமைத்துள்ளார். வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜு அவர்களின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் வெளியிடும் சாகுந்தலம் திரைப்படம் வருகிற பிப்ரவரி 17ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில், சமந்தாவின் சாகுந்தலம் திரைப்படத்தின் ரிஷிவனம் தானே பாடல் தற்போது வெளியானது. ரொமான்டிக்கான அந்த பாடல் இதோ…

 

சிவகார்த்திகேயனின் அதிரடியான மாவீரன்… வதந்திகளுக்கு திருக்குறளில் பதிலடி கொடுத்த படக்குழு! விவரம் இதோ
சினிமா

சிவகார்த்திகேயனின் அதிரடியான மாவீரன்… வதந்திகளுக்கு திருக்குறளில் பதிலடி கொடுத்த படக்குழு! விவரம் இதோ

கடவுள் எல்லோருக்கும் ஒன்று தான்... சர்ச்சைக்குரிய கேள்விக்கு ஐஸ்வர்யா ராஜேஷின் தரமான பதில்! விவரம் உள்ளே
சினிமா

கடவுள் எல்லோருக்கும் ஒன்று தான்... சர்ச்சைக்குரிய கேள்விக்கு ஐஸ்வர்யா ராஜேஷின் தரமான பதில்! விவரம் உள்ளே

துணிவு பிளாக்பஸ்டருக்கு பின் அட்டகாசமான புது லுக்கில் அஜித்... ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் & வீடியோ இதோ!
சினிமா

துணிவு பிளாக்பஸ்டருக்கு பின் அட்டகாசமான புது லுக்கில் அஜித்... ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் & வீடியோ இதோ!