துணிவு பிளாக்பஸ்டருக்கு பின் அட்டகாசமான புது லுக்கில் அஜித்... ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் & வீடியோ இதோ!

விமான நிலையத்திற்கு வந்த அஜித் குமாரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்,ajith kumar in new photos and videos from airport goes viral | Galatta

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராகவும் பல கோடி ரசிகர்களின் அபிமான நட்சத்திர நாயகராகவும் விளங்கும் அஜித் குமார் நடிப்பில் கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளிவந்த துணிவு திரைப்படம் பக்கா மாஸ் ஆக்சன் என்டர்டைனர் திரைப்படமாக அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டாகியுள்ளது.

சதுரங்க வேட்டை - தீரன் அதிகாரம் ஒன்று என தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் படைப்புகளை கொடுத்த இயக்குனர் வினோத் அஜித் குமாருடன் இணைந்த நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து மூன்றாவது வெற்றி படமாக துணிவு திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

துணிவு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக முதல் முறை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் AK62 திரைப்படத்தில் அஜித் குமார் நடிக்க இருக்கிறார். லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் AK62 திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கும் AK62 திரைப்படத்தில் அரவிந்த்சுவாமி & சந்தானம் உள்ளிட்ட பலர் நடிக்க இருப்பதாக தெரிகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது விமான நிலையத்திற்கு வந்த அஜித்குமாரின் புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. முன்னதாக துணிவு படத்திதற்காக அஜித் வைத்திருந்த கெட்டப் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது புதிய லுக்கில் இருக்கும் அஜித்குமாரின் புகைப்படங்களை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். வைரலாகும் அந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இதோ…
 

#AK Latest Vedio ❤️🔥#Thunivu #AjithKumar #AK62 pic.twitter.com/YLp2IU6byB

— ᴠɪꜱʜɴᴜ_ᴋ (@vishnu_k2000) January 25, 2023
 

AK recent Video !! #Ajithkumar𓃵 | #AK62 | #Thunivu pic.twitter.com/LM3BuAWsbM

— MASS AJITH (@MASSAJITH) January 25, 2023

விபத்துக்கு பிறகு தன் உடல்நிலை குறித்து விஜய் ஆண்டனியின் முதல் பதிவு... முக்கிய அறுவை சிகிச்சை முடிந்தது! விவரம் உள்ளே
சினிமா

விபத்துக்கு பிறகு தன் உடல்நிலை குறித்து விஜய் ஆண்டனியின் முதல் பதிவு... முக்கிய அறுவை சிகிச்சை முடிந்தது! விவரம் உள்ளே

கோல்டன் குளோப்-ஐ தொடர்ந்து ஆஸ்கார் விருதை நெருங்கியது SSராஜமௌலியின் RRR! அதிகாரப்பூர்வ இறுதி பட்டியல் இதோ
சினிமா

கோல்டன் குளோப்-ஐ தொடர்ந்து ஆஸ்கார் விருதை நெருங்கியது SSராஜமௌலியின் RRR! அதிகாரப்பூர்வ இறுதி பட்டியல் இதோ

அஜித்தின் துணிவு பட ஸ்டண்ட் காட்சிகள் உருவான விதம்... இதுவரை வெளிவராத பக்கா ACTION PACKED MAKING வீடியோ இதோ!
சினிமா

அஜித்தின் துணிவு பட ஸ்டண்ட் காட்சிகள் உருவான விதம்... இதுவரை வெளிவராத பக்கா ACTION PACKED MAKING வீடியோ இதோ!