வேற லெவல் FUN உறுதி... குக் வித் கோமாளி சீசன் 4 செட்டில் புகழின் சேட்டை - கலக்கலான வீடியோ இதோ!

குக் வித் கோமாளி சீசன் 4ல் புகழின் செட் டூர் வீடியோ,cook with comali season 4 set tour video by pugazh | Galatta

சின்னத்திரை ரசிகர்களுக்கு ரியாலிட்டி நிகழ்ச்சிகளின் மீது எப்போதும் ஆர்வம் அதிகம். அதிலும் விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ரசிகர்களுக்கு ஆல் டைம் ஃபேவரட் நிகழ்ச்சிகளில் முன்னிலையில் இருக்கும். அந்த வகையில் அனைத்து வயது ரசிகர்களின் மனதை கவர்ந்த ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி.

கலகலப்பான சமையல் நிகழ்ச்சியாக ரசிகர்களின் கவனம் ஈர்க்கும் இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் அஸ்தான நடுவர்களாக புகழ்பெற்ற சமையல் நிபுணர்களான செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் ஆகியோர் நடுநிலையோடு நீதிபதிகளாக இருக்க , ரக்சன் அசத்தலான தொகுப்பாளராக தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார்.

இதுவரை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மூன்று சீசன்கள் நிறைவடைந்துள்ளன. குக் வித் கோமாளி சீசன் 1ல் நடிகை வனிதா விஜயகுமார் டைட்டிலை தட்டிச் சென்றார். தொடர்ந்து சீசன் 2ல் கனி மற்றும் சீசன் 3ல் ஷ்ரூத்திகா ஆகியோர் டைட்டிலை வென்றனர். இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு குக் வித் கோமாளி சீசன் 4ன் அறிவிப்பு வெளியானது.

இந்த முறை குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக ஆண்ட்ரேன் நோக்ரியாட், ஜிகர்தண்டா நடிகர் காளையன், இயக்குனரும் நடிகருமான கிஷோர் ராஜ்குமார், வலிமை பட நடிகர் ராஜ் ஐயப்பா, நடிகை ஷெரின், நடிகை ஷ்ருஷ்டி டாங்கே, நடிகை விசித்ரா, பிக் பாஸ் தாமரைச்செல்வி, VJ விஷால் ஆகியோருடன் கோமாளியாக இதுவரை கலக்கிய சிவாங்கி போட்டியாளராக களம் இறங்குகிறார் என தகவல்கள் வெளிவந்துள்ளன.

மேலும் கோமாளிகளாக மணிமேகலை, புகழ், குரேஷி, சுனிதா, GPமுத்து, ஓட்டேரி சிவா, சில்மிஷம் சிவா, சிங்கப்பூர் தீபன், ரவீனா, மோனிஷா பிளஸ்சி ஆகியோர் கலக்கவுள்ளனர். இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்காவது சீசனின் செட்டை நமக்கு புகழ் சுற்றிக் காட்டும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. கலகலப்பான அந்த வீடியோ இதோ…
 

கடவுள் எல்லோருக்கும் ஒன்று தான்... சர்ச்சைக்குரிய கேள்விக்கு ஐஸ்வர்யா ராஜேஷின் தரமான பதில்! விவரம் உள்ளே
சினிமா

கடவுள் எல்லோருக்கும் ஒன்று தான்... சர்ச்சைக்குரிய கேள்விக்கு ஐஸ்வர்யா ராஜேஷின் தரமான பதில்! விவரம் உள்ளே

துணிவு பிளாக்பஸ்டருக்கு பின் அட்டகாசமான புது லுக்கில் அஜித்... ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் & வீடியோ இதோ!
சினிமா

துணிவு பிளாக்பஸ்டருக்கு பின் அட்டகாசமான புது லுக்கில் அஜித்... ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் & வீடியோ இதோ!

தளபதி விஜயின் வாரிசு வெற்றி கொண்டாட்டம்... படக்குழுவுடன் கண்டு ரசித்த முன்னணி பிரபலத்தின் பதிவு! வைரல் புகைப்படங்கள் இதோ
சினிமா

தளபதி விஜயின் வாரிசு வெற்றி கொண்டாட்டம்... படக்குழுவுடன் கண்டு ரசித்த முன்னணி பிரபலத்தின் பதிவு! வைரல் புகைப்படங்கள் இதோ