“போற உயிர் போராடியே போகட்டும்” – பா ரஞ்சித் தயாரிப்பில் புதிய பட டிரைலர் வெளியானது.. குவிந்து வரும் பாராட்டுக்கள்..

யோகி பாபு நடித்த பொம்மை நாயகி படத்தின் டிரைலர் வெளியானது - Pa ranjith new movie trailer released | Galatta

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. தனித்துவமான கவுன்டர்கள், உடல் பாவனைகள் மூலம் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர். வெறும் நகைச்சுவை மட்டுமல்லாமல் கதை நாயகனாகவும் நடித்து வருகிறார். அதன்படி யோகி பாபு முன்னனி கதாபாத்திரத்தில் பல படங்களில் நடித்துள்ளார். அதில் குறிப்பாக 2020 ல் வெளியான  'மண்டேலா'  திரைப்படம் அனைவராலும் பாரட்டப்பட்டது. மேலும் விருதுகள் பலவும் அந்த படம் பெற்றது. யோகி பாபு நடிகன் என்று அங்கீகரித்த படமாகவும் அந்த படம் இருந்தது. 

அதனை தொடர்ந்து யோகி பாபு நகைச்சுவை நடிகராகவும் நகைச்சுவை கதைக்களத்தில் கதாநாயகனாகவும் மட்டும் நடிக்காமல் நல்ல கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதன்படி பிரபல இயக்குனர் பா.ரஞ்சத்தின் நீலம் தயாரிப்பு மற்றும் யாழி பிலிம்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஷான் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள படம் ‘பொம்மை நாயகி’. பா ரஞ்சித் தயாரிப்பில் வெளிவந்துள்ள பல படங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது அதன் வரிசையில்  இந்த படமும் நல்ல அங்கீகாரத்தை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் அதிசய ராஜ் ஒளிப்பதிவு செய்ய சுந்தரமூர்த்தி இசை அமைத்துள்ளார் .மேலும் வரும் பிப்ரவரி 3 ம் தேதி  தமிழகமெங்கும் திரைக்கு வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. பொம்மை நாயகி படத்தில் யோகி பாபுவுடன் இணைந்து சுபத்ரா, ஹரி, ஜி.என்.குமார், அருள்தாஸ், ஜெயச்சந்திரன், லிசி ஆண்டனி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் படத்திற்கான டிரைலரை படக்குழு வெளியிட்டு உள்ளது. எளிய குடும்பத்து தகப்பனாக நடித்துள்ள யோகி பாபு தன் மகளுக்கு நேர்ந்த அநியாயத்திற்கு போராடும் கதைக்களமாக பொம்மை நாயகி திரைப்படம் உருவாகியுள்ளது. உணர்வுபூர்வமான பொம்மை நாயகி டிரைலர் தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. நிச்சயம் இந்த படம் யோகி பாபு மற்றும் படக்குழுவினருக்கு பாராட்டுகளை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

‘தளபதி 67’ Official update தேதியை அறிவித்த லோகேஷ் கனகராஜ்.. – ரசிகர்கள் கொண்டாட்டம்..
சினிமா

‘தளபதி 67’ Official update தேதியை அறிவித்த லோகேஷ் கனகராஜ்.. – ரசிகர்கள் கொண்டாட்டம்..

“எனக்கா End card..” - ஒன்றரை வருடம் கழித்து மாஸ் ரீ என்ட்ரி கொடுத்த கங்கனா ரனாவத்.. உற்சாகத்தில் ரசிகர்கள்.. வைரல் பதிவு இதோ..
சினிமா

“எனக்கா End card..” - ஒன்றரை வருடம் கழித்து மாஸ் ரீ என்ட்ரி கொடுத்த கங்கனா ரனாவத்.. உற்சாகத்தில் ரசிகர்கள்.. வைரல் பதிவு இதோ..

இந்த முறை Miss ஆகாது.. மீண்டும் வருகிறான் ஆளவந்தான்.. – Re Release.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!
சினிமா

இந்த முறை Miss ஆகாது.. மீண்டும் வருகிறான் ஆளவந்தான்.. – Re Release.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!