சிலம்பரசன்TR-ன் வெந்து தணிந்தது காடு பட ஸ்பெஷல் கிஃப்ட் ரெடி... ARரஹ்மானின் அறிவிப்பால் உற்சாகத்தில் ரசிகர்கள்!

வெந்துத் தணிந்தது காடு OST ரிலீஸ் குறித்து ARரஹ்மான் பதிவு,vendhu thanindhathu kaadu ost sent to think music | Galatta

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சிலம்பரசன்.TR, மாநாடு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனது அடுத்தடுத்த திரைப்படங்களில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல திரைப்படத்தில் AGR எனும் மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

சிலம்பரசன்.TR உடன்  நடிகர் கெளதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள பத்து தல திரைப்படம் வருகிற மார்ச் 30ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. முன்னதாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன்.TR கதாநாயகனாக நடித்து கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டாகியுள்ளது.

புகழ்பெற்ற எழுத்தாளர் ஜெயமோகனின் கதையில் தயாரிப்பாளர் ஐசரி.கே.கணேஷ் அவர்களின் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்த, வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் சிலம்பரசன்.TR உடன் இணைந்து சித்தி இத்னானி கதாநாயகியாக நடிக்க, ராதிகா சரத்குமார், கயடு லோஹர், சித்திக் மற்றும் நீரஜ் மாதவ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சித்தார்த்தா நுன்னி ஒளிப்பதிவில், ஆன்டனி படத்தொகுப்பு செய்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு இசைப்புயல் AR.ரஹ்மான் இசையமைத்துள்ளார். வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் 2ம் பாகமும் விரைவில் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் OST பின்னணி இசை ட்ராக்குகளுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்பு விரைவில் அவற்றை வெளியிட திட்டமிட்டு இருப்பதாக AR.ரஹ்மான் தெரிவித்தார். 

இந்நிலையில் தற்போது அந்த சவுண்ட் ட்ராக்குகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட இசை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இசை உரிமத்தை திங்க் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில், விரைவில் திங்க் மியூசிக் வென்று தணிந்தது காடு படத்தின் OST பின்னணி இசை ட்ராக்குகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Masters of VTK and Kochedaiyaan scores …given to respective music companies😍 https://t.co/z6JEEOW2pU

— A.R.Rahman (@arrahman) January 25, 2023

துணிவு பிளாக்பஸ்டருக்கு பின் அட்டகாசமான புது லுக்கில் அஜித்... ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் & வீடியோ இதோ!
சினிமா

துணிவு பிளாக்பஸ்டருக்கு பின் அட்டகாசமான புது லுக்கில் அஜித்... ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் & வீடியோ இதோ!

தளபதி விஜயின் வாரிசு வெற்றி கொண்டாட்டம்... படக்குழுவுடன் கண்டு ரசித்த முன்னணி பிரபலத்தின் பதிவு! வைரல் புகைப்படங்கள் இதோ
சினிமா

தளபதி விஜயின் வாரிசு வெற்றி கொண்டாட்டம்... படக்குழுவுடன் கண்டு ரசித்த முன்னணி பிரபலத்தின் பதிவு! வைரல் புகைப்படங்கள் இதோ

சினிமாவை விட்டு போகணுமா? ட்ரோல்கள்-எதிர்மறை விமர்சனங்களால் கோபமடைந்த ராஷ்மிகாவின் பதிலடி! விவரம் உள்ளே
சினிமா

சினிமாவை விட்டு போகணுமா? ட்ரோல்கள்-எதிர்மறை விமர்சனங்களால் கோபமடைந்த ராஷ்மிகாவின் பதிலடி! விவரம் உள்ளே