தமிழகத்தின் சிறந்த நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் #Suriya41 திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். சமீபத்தில் தொடங்கிய இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற்று நிறைவடைந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

முன்னதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து சில தினங்களுக்கு முன்பு வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டாகியுள்ள விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் எனும் கதாபாத்திரத்தில் சிறப்புத் தோற்றத்தில் சில நிமிடங்களே தோன்றி ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார் சூர்யா.

இதனைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவிருக்கும் சூர்யா தொடர்ந்து இன்று நேற்று நாளை & சிவகார்த்திகேயனின் அயலான் ஆகிய படங்களின் இயக்குனர் R.ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இத்திரைப்படம் குறித்த முக்கிய அறிவிப்பை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் S.R.பிரபு ட்விட்டர் SPACE-ல் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டரை வருடங்களாக இத்திரைப்படத்திற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் PAN இந்தியாவை தாண்டி இன்டர்நேஷனல் திரைப்படமாக இத்திரைப்படத்தை உருவாக்க திட்டமிட்டு வருவதாகவும் இது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார். இயக்குனர் R.ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் இத்திரைப்படத்தின் இந்த அப்டேட் தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தயாரிப்பாளர் SR.பிரபு பேசிய அந்த பதிவு இதோ…