தனது முதல் படமான மாநகரம் திரைப்படத்திலேயே ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அடுத்து இவரது இயக்கத்தில் வெளிவந்த கைதி திரைப்படம் சூப்பர் ஹிட்டாகி வர்த்தகரீதியாக வெற்றி பெற்றதோடு விமர்சன ரீதியாகவும் அனைவரது பாராட்டுகளையும் பெற்றது.

இதனையடுத்து தளபதி விஜயுடன் இணைந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் கொரோனா தொற்றால் நலிவடைடைந்த திரையரங்குகளுக்கு புத்துயிர் கொடுத்தது. அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்து வந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் விக்ரம்.

உலக நாயகனின் தீவிர ரசிகரான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் பாசில் இணைந்து நடித்து வெளிவந்த விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டாகி தொடர்ந்து பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை படைத்து வருகிறது.

விக்ரம் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தளபதி விஜயுடன் மீண்டும் தளபதி67 திரைப்படத்தில் இணைய உள்ளதாக தெரிகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இயக்குனரும் மாஸ்டர் & விக்ரம் படங்களின் வசனகர்த்தாவுமான ரத்னகுமார் மற்றும் தளபதி விஜயின் மேலாளர் ஜெகதீஷ் ஆகியோருடன் இணைந்து திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்துள்ளார். எனவே தளபதி67 திரைப்படத்தின் அறிவிப்புக்கு முன்னதாக தற்போது திருப்பதிக்கு சென்று வந்துள்ளதாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.