தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகர்களில் ஒருவராக முன் பல கோடி தெலுங்கு சினிமா ரசிகர்களின் பேவரைட் ஹீரோவாகவும் திகழ்பவர் நடிகர் மகேஷ்பாபு. அடுத்ததாக இயக்குனர் த்ரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில் #SSMB28 திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு #SSMB28  திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இதனிடையே விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான கீதா கோவிந்தம் திரைப்படத்தின் இயக்குனர் பரசுராம் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்துள்ள திரைப்படம் சர்க்காரு வாரி பாட்டா. மைத்ரி மூவி மேக்கர்ஸ், 14 ரீல்ஸ் பிளஸ்  மற்றும் G.மகேஷ் பாபு என்டர்டெயின்மென்ட் இணைந்து சர்க்காரு வாரி பாட்டா தயாரித்துள்ளன. 

சர்க்காரு வாரி பாட்டா படத்தில் மகேஷ் பாபுவுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க, சமுத்திரக்கனி, வென்னலா கிஷோர், சுப்பராஜு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மதி ஒளிப்பதிவில், மார்தண்ட்.K.வெங்கடேஷ் படத்தொகுப்பு செய்துள்ள சர்க்காரு வாரி பாட்டா படத்திற்கு தமன்.S இசையமைத்துள்ளார்.

கடந்த மே 12ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசான சர்க்காரு வாரி பாட்டா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற பிளாக்பஸ்டர் ஹிட்டாகியுள்ளது. இந்நிலையில்  சர்க்காரு வாரி பாட்டா படத்திலிருந்து பென்னி பாடல் வீடியோ தற்போது வெளியானது . கலக்கலான பென்னி வீடியோ பாடல் இதோ…