மலையாளத்தில் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளிவந்து இந்திய அளவில் பலரது கவனத்தையும் ஈர்த்த பிரேமம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்த நடிகை சாய் பல்லவி தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வருகிறார்.

முன்னதாக சாய்பல்லவி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த விரட்ட பர்வம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி நடித்துள்ள கார்கி திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் தயாராகி வெளிவரவுள்ளது.

ப்ளாக்கி ஜெனி & மை லெஃப்ட் ஃபூட் ப்ரொடக்ஸன்ஸ் ரவிச்சந்திரன் ராமச்சந்திரன், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, தாமஸ் ஜார்ஜ் மற்றும் கௌதம் ராமச்சந்திரன் இணைந்து தயாரித்துள்ள கார்கி படத்தில் சாய்பல்லவி உடன் இணைந்து ஐஸ்வர்யா லெக்ஷ்மி மற்றும் காளி வெங்கட் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஷ்ரயான்தி  மற்றும் பிரேம் கிருஷ்ணா அக்கட்டு ஒளிப்பதிவில் கோவிந்த் வசந்தா இசை அமைக்க கார்கி திரைப்படத்திற்கு பிரபல பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பாடல்களை எழுதியுள்ளார். சக்தி பிலிம் ஃபேக்டரி கார்கி திரைப்படத்தின் ரிலீஸ் உரிமத்தை நிறுவனம் கைப்பற்றியுள்ளது. வருகிற வூள்ளிக்கிழமை (ஜூலை 15ஆம் தேதி) கார்கி திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

தமிழகத்தில் சூர்யா-ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் கார்கி படத்தை வெளியிடுகிறது. இந்நிலையில் கார்கி திரைப்படத்திலிருந்து யாத்ரி எனும் பாடல் தற்போது வெளியானது. மனதை மயக்கும் அந்த யாத்ரி பாடலை கீழே உள்ள லிங்கில் கேட்டு மகிழுங்கள்.