தமிழ் திரை உலகின்  குறிப்பிடப்படும் சிறந்த இயக்குநர்களில் ஒருவராகவும் நடிகராகவும் திகழும் பார்த்திபன் அவர்கள் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் சின்ன பழுவேட்டரையர் எனும் மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

முன்னதாக உலக சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக நமது கற்பனைகளுக்கு அப்பாற்பட்ட சாதனை முயற்சியாக பார்த்திபன் உருவாக்கியுள்ள இரவின் நிழல் திரைப்படம் வருகிற வெள்ளிக்கிழமை ஜூலை 15ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது. உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் (Non Linear Single Shot Movie) திரைப்படமாக உருவாகியிருக்கும் இரவின் நிழல் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் பார்த்திபனுடன் இணைந்து வரலட்சுமி சரத்குமார், ப்ரிகிடா, ரோபோ ஷங்கர் ,பிரியங்கா மற்றும் கிருஷ்ணா உள்ளிட்டோர் இரவின் நிழல் திரைப்படத்தில் நடித்துள்ளனர். பயாஸ்கோப் பிலிம் ஃபிரேமர்ஸ் தயாரித்துள்ள இரவின் நிழல் திரைப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி.எஸ்.தாணு அவர்கள் வெளியிடுகிறார். 

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இரவின் நிழல் திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இரவின் நிழல் திரைப்படத்திலிருந்து புதிய ப்ரோமோ வீடியோ தற்போது வெளியானது. அந்த புதிய ப்ரோமோ வீடியோ இதோ…