தமிழ் சினிமாவின் மிக முக்கிய தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் நடிகராகவும் வலம் வரும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் மாமன்னன் திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். மாமன்னன் திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

தயாரிப்பாளராக மட்டுமல்லாமல் விநியோகஸ்தராகவும் பல முக்கிய திரைப்படங்களை சிறப்பாக வெளியிட்டு வரும் உதயநிதி ஸ்டாலின், இந்த 2022ஆம் ஆண்டில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், விஷ்ணு விஷாலின் FIR, பிரபாஸின் ராதேஷ்யாம், தளபதி விஜயின் பீஸ்ட், விஜய் சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல், சிவகார்த்திகேயனின் டான், உலகநாயகன் கமல்ஹாசனின் விக்ரம், மாதவன் இயக்கி நடித்த ராக்கெட்ரி ஆகிய படங்களை வெளியிட்டார்.

தொடர்ந்து சீயான் விக்ரமின் கோப்ரா, தனுஷின் திருச்சிற்றம்பலம், சிலம்பரசன்TR-ன் வெந்து தணிந்தது காடு, கார்த்தியின் சர்தார், ஆர்யாவின் கேப்டன் ஆகிய திரைப்படங்களையும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது. இந்த வரிசையில் அடுத்ததாக இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள குலுகுலு திரைப்படத்தையும் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் வெளியிடவுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள குலு குலு படத்தில் அதுல்யா சந்த்ரா கதாநாயகியாக நடிக்க, நமீதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத் ,மரியம் ஜார்ஜ், லொள்ளுசபா மாறன், லொள்ளுசபா சேஷு, TSR ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குலு குலு படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.வருகிற ஜூலை 29-ம் தேதி குலுகுலு திரைப்படம் ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Delighted to announce that we have acquired the Tamil Nadu Theatrical Distribution rights of #GuluGulu.🎉🤣

The Ultimate laughter and chaos is coming. In cinemas from July 29th.🤩@iamsanthanam @MrRathna @circleboxE @Music_Santhosh @KVijayKartik @rajnarayanan_ @jacki_art pic.twitter.com/N7fQTNqh3Z

— Red Giant Movies (@RedGiantMovies_) July 12, 2022