தனது தந்தையும் தமிழ் திரையுலகின் பன்முகத்தன்மை கொண்ட கலைஞருமான T.ராஜேந்தர் அவர்களை உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்து சென்று பூரண குணமடையும் வரை உடனிருந்து கவனித்துக் கொண்ட சிலம்பரசன்.TR சில தினங்களுக்கு முன்பு சென்னை திரும்பினார். தொடர்ந்து இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் தயாராகி வரும் பத்து தல திரைப்படத்தின் படப்பிடிப்பில் தற்போது கலந்து கொண்டுள்ளார்.

முன்னதாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன்.TR நடித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் ஹன்சிகாவின் 50வது திரைப்படமாக தயாராகியுள்ள மஹா திரைப்படத்தில் சிலம்பரசன்.TR முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

வருகிற ஜூலை 22ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ள மஹா திரைப்படத்தில் ரீகாந்த், சனம் செட்டி, தம்பி ராமையா, கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குனர் UR.ஜமீல் இயக்கத்தில் மஹா திரைப்படத்திற்கு R.மதி ஒளிப்பதிவில், ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

மஹா திரைப்படத்தை ETCETERA என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் மதியழகன் அவர்கள் தயாரித்துள்ளார். ரிலீஸுக்கு பின் மஹா திரைப்படம் ஆஹா தமிழ் (aha tamil) OTT தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மஹா திரைப்படத்தின் புதிய ட்ரைலர் தற்போது வெளியானது. அந்த ட்ரைலர் இதோ…