தென்னிந்திய சினிமாவின் குறிப்பிடப்படும் சிறந்த நடிகைகளில் ஒருவராக தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து மிகச் சிறப்பாக நடித்து ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடிக்கும் நடிகை சாய் பல்லவியின் நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு வெளியான கார்கி தொடங்கி படம் நல்ல வரவேற்பை பெற்றது

இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் கார்கி திரைப்படத்தில் சாய்பல்லவி உடன் இணைந்து ஐஸ்வர்யா லெக்ஷ்மி மற்றும் காளி வெங்கட் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.கார்கி படத்திற்கு ஷ்ரயான்தி மற்றும் பிரேம் கிருஷ்ணா அக்கட்டு ஒளிப்பதிவில், கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

ப்ளாக்கி ஜெனி & மை லெஃப்ட் ஃபூட் ப்ரொடக்ஸன்ஸ் ரவிச்சந்திரன் ராமச்சந்திரன், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, தாமஸ் ஜார்ஜ் மற்றும் கௌதம் ராமச்சந்திரன் இணைந்து தயாரிக்க, சக்தி பிலிம் ஃபேக்டரி வழங்க தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் ரிலீசான கார்கி திரைப்படத்தை தமிழகத்தில் சூர்யா-ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிட்டது. 

உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்ற கார்கி படம் விமர்சன ரீதியாகவும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் கார்கி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 12-ஆம் தேதி முதல் தளத்தில் ஒளிபரப்பாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.