கார்த்தியின் விருமன் பட பட்டையை கிளப்பும் ட்ரைலர் இதோ !
By Aravind Selvam | Galatta | August 03, 2022 20:54 PM IST

கதைதேர்வில் எப்போதும் வித்தியாசம் காட்டும் நடிகர்களில் ஒருவர் கார்த்தி.ரெமோ பட இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இதனை தொடர்ந்து இவர் மணி ரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன்,முத்தையா இயக்கத்தில் விருமன் உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார் கார்த்தி.இந்த படங்கள் விரைவில் வெளியாகவுள்ள.சர்தார் படத்தின் ஷூட்டிங்கில் விறுவிறுப்பாக கலந்துகொண்டு வருகிறார் கார்த்தி.
விருமன் படத்தினை 2D எண்டெர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளனர்.இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் இந்த படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.கொம்பன் படத்தினை அடுத்து இயக்குனர் முத்தையாவுடன் இணைந்துள்ளார் கார்த்தி.
இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் செம ஹிட் அடித்து வருகிறது.இந்த படம் வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.இந்த படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா மதுரையில் இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது.தற்போது இந்த படத்தின் அசத்தலான ட்ரைலர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்
New Romantic Promo Teaser from Karthi's Viruman is out - Don't miss this!
02/08/2022 05:00 PM
Karthi's next film Viruman gets an exciting release update - find out here!
02/08/2022 12:04 PM