தெலுங்கு சினிமாவில் தற்போதைய காலகட்டத்தில் இருபெரும் முன்னணி நாயகர்களாக திகழ்ந்து வருபவர்கள் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் மற்றும் NTR மகன் Jr.NTR.இருவருக்கும் இருபெரும் ரசிகர் பட்டாளங்கள் உள்ளன.இவர்கள் இருவரும் இணைந்து தற்போது RRR படத்தில் நடித்து வருகின்றனர்.மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்த படம் உருவாகியுள்ளது.

பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை அடுத்து விடுதலை போராட்ட வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படத்தை ராஜமௌலி இயக்கியுள்ளார்.இந்த படமும் பாகுபலி படத்தினை போல முக்கிய இந்தியா மொழிகளில் வெளியாகவுள்ளது.ஆலியா பட்,அஜய் தேவ்கன்,சமுத்திரக்கனி,ஷ்ரேயா என்று பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகிறது.

இந்த படத்தின் தமிழ்நாடு தமிழ்நாடு திரையரங்க உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்ஷ்ன்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளனர்.இந்த படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படம் ஜனவரி 7ஆம் தேதி 2022ல் வெளியாகவிருந்தது ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக மார்ச் 25ஆம் தேதிக்கு தள்ளிப்போனது.

பிரம்மாண்டமாக வெளியாக தயாராகி வரும் இந்த படத்தின் புதிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.இந்த படத்தின் அடுத்த பாடலான RRR Celebration Anthem பாடலை வரும் மார்ச் 14ஆம் தேதி வெளியிடப்போவதாக செம கலர்புல்லான போஸ்டருடன் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.இந்த பாடல் ரிலீஸை ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.