தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாக இருக்கிறார் தளபதி விஜய். தமிழ்நாடு மற்றும் கேரளாவில் அதிக ரசிகர்களை கொண்ட தமிழ் நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினரையும் கட்டிப்போடும் மாயாஜாலம்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு பிறகு தளபதி விஜய்க்கு மட்டுமே உள்ளது. 

மாநகரம் ,கைதி படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் இந்த வருடம் ஜனவரி மாதம் வெளியானது. கொரோனா,  ஊரடங்கு,50சதவீத இருக்கைகள் என மிகுந்த பாதிப்பிலிருந்து திரை அரங்குகள் அனைத்தும் புத்துயிர் பெற்றது மாஸ்டர் திரைப்படத்தின் ரிலீசுக்கு பிறகு தான். 

மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங்  உலகம் முழுவதும் அனைவரும் குத்தாட்டம் போட வைத்தது பல பிரபலங்களும் வாத்தி கம்மிங் பாடலுக்கு  தளபதி விஜய் ஆடிய அதே அசைவுகளை ஆடி தங்களது சமூக வலைதளங்களில் வெளியிடுவது வைரலாகி வருகிறது. 

riyan parag dance for vaathi coming goes viral

இந்நிலையில் ஐபிஎல் இன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடும் ஆல்ரவுண்டர் ரியான் பராக் உடற்பயிற்சியில் ஈடுபடும் பொழுது வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடும் வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி மிகவும் வைரலாகி கொண்டிருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய ஐபிஎல் போட்டிகள்  பரபரப்பாக நடந்து வந்த நிலையில் குறள் 102 மழையின் காரணமாக நேற்று தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிக்கை வெளியானது குறிப்பிடத்தக்கது.