இந்தியாவின் கொரானா தொற்றின் இரண்டாவது அலை மிகவும் தீவிரமடைந்து இருக்கும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4 லட்சத்து 12 ஆயிரம் பேருக்கு ஒரு மாற்றத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். இந்நிலையில் பல சினிமா பிரபலங்களும் கொரானா தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். 

tamil actress singer andrea recovers from corona

தமிழில் பாடகியாக அறிமுகமாகி பிறகு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளர்ந்தார் பாடகி, நடிகை ஆண்ட்ரியா. 2007 ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமான நடிகை ஆண்ட்ரியா தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன் ,மங்காத்தா, விஸ்வரூபம், உத்தமவில்லன் தரமணி, வடசென்னை என தமிழ் சினிமாவின் பல முக்கியமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பாக காய்ச்சலின் அறிகுறிகள் தென்பட்ட நிலையில் கொரானா பரிசோதனை செய்து கொண்ட ஆண்ட்ரியாவுக்கு கொரானா வைரஸ் தொற்று உறுதியானது. இதனால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்ட ஆண்ட்ரியா இப்போது உடல்நலம் தேறி இருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், “அனைவருக்கும் வணக்கம் சென்ற வாரம் நான் COVID 19 பரிசோதனை செய்துகொண்டதில்  எனக்கு கொரானா வைரஸ் தொற்று உறுதியானது. எனது நண்பர்களும் குடும்ப உறுப்பினர்களும் என்னை நன்றாக கவனித்துக் கொண்டனர் அவர்கள் அனைவருக்கும் நான் நன்றியுள்ளவளாக இருப்பேன் இன்னும் வீட்டில் தனிமைப்படுத்துதலில் தான் இருக்கிறேன் ஆனால் நன்றாக குணமடைந்து வருகிறேன்”

என பதிவிட்டு உலகம் மோசமான நிலையில் இருப்பதையும் தெரிவித்து பியானோ வாசித்தபடி ஒரு பாடலையும் பாடி அந்த வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.நடிகை ஆண்ட்ரியா. முன்னதாக தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஆண்ட்ரியா அடுத்து வெளிவர உள்ள அரண்மனை 3 ,மாளிகை , பிசாசு 2 போன்ற திரைப்படங்களில் நடிக்க உள்ளார்.