கடந்த 2010-ம் ஆண்டு வெளியான சித்து பிளஸ் 2 படத்தின் மூலம் சாந்தனுவுக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை சாந்தினி. அதையடுத்து பில்லா பாண்டி, வில் அம்பு, கட்டப்பாவ காணோம், மன்னர் வகையறா, ராஜா ரங்கூஸ்கி உள்ளிட்ட படங்களில் சாந்தினி நடித்துள்ளார். நடிகை சாந்தினியும் நடன இயக்குநர் நந்தாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். நடன இயக்குநர் நந்தா, தமிழில் இரும்புத்திரை, வில் அம்பு, பியார் பிரேமா காதல் ஆகிய படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் இவர்களின் திருமணம் வீட்டார் சம்மதத்துடன் 2018-ம் ஆண்டு நடந்தது. திருமணத்திற்கு பிறகும் படங்களில் தொடர்ந்து நடிக்கிறார் சாந்தினி. கடந்த ஆண்டு நடிகை சாந்தினி பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்துகொள்வதாக தகவல்கள் வெளியாகின. 

இதுகுறித்து பேசிய நடிகை சாந்தினி, கலந்து கொள்ளலாமா? வேண்டாமா? என நான் இன்னும் முடிவு செய்யவில்லை. கையில் இருக்கும் படங்களை சொன்ன தேதியில் முடித்துக் கொடுத்தாக வேண்டும். எனவே, இப்போதைக்கு இந்த செய்தி உண்மையில்லை என்று தெளிவு படுத்தினார். 

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இரட்டை ரோஜா என்ற சீரியலில் ஷிவானி நாராயணனுக்கு பதிலாக நடிகை சாந்தினி இரண்டு ரோல்களில் நடித்து வருகிறார். விஜய் டிவியில் தாழம்பூ எனும் சீரியலில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து இந்த சீரியலில் அசத்தி வருகிறார். 

இந்நிலையில் கணவருடன் சேர்ந்து க்யூட்டான இன்ஸ்டாகிராம் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த சாந்தினியின் ரசிகர்கள் இந்த வீடியோவை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அற்புதமான ஜோடி என்றும் பாராட்டி வருகின்றனர். 

ராதா மோகன் இயக்கத்தில் உருவான பொம்மை படத்தில் நடித்துள்ளார் சாந்தினி. எஸ்.ஜே.சூர்யா மற்றும் பிரியா பவானி ஷங்கர் நடிக்கும் இந்த படத்தின் ஒட்டு மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து, போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by CHANDINI (@chandiniofficial)