தென்னிந்தியத் திரையுலகின் குறிப்பிடப்படும் கதாநாயகிகளில் ஒருவராக வலம் வரும் நடிகை ரெஜினா கெஸன்ட்ரா நடிப்பில் தொடர்ந்து இந்த ஆண்டும் தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அடுத்தடுத்த திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன. முன்னதாக தெலுங்கில் சாகினி டாகினி திரைப்படத்தில் ரெஜினா கெஸன்ட்ரா தற்போது நடித்து வருகிறார்.

தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி வரும் சூர்ப்பனகை திரைப்படத்திலும் ரெஜினா கெஸன்ட்ரா நடித்து வருகிறார். மேலும் அருண்விஜயின் பார்டர், அரவிந்த்சாமியின் கள்ளபார்ட், ஹாரர் திரில்லர் படமான கருங்காப்பியம் உள்ளிட்ட திரைப்படங்கள் ரெஜினா கெஸன்டரா நடிப்பில் அடுத்தடுத்து வெளிவர தயாராகி வருகின்றன.

இந்த வரிசையில் அடுத்ததாக ரெஜினா கெஸன்ட்ரா நடித்துள்ள திரைப்படம் அன்யாஸ் டுட்டோரியல். இயக்குனர் பல்லவி கங்கி ரெட்டி இயக்கத்தில் ஹாரர் த்ரில்லர் படமாக வெளிவரும் அன்யாஸ் டுட்டோரியல் திரைப்படம் வருகிற ஜூலை 1ஆம் தேதி நேரடியாக Aha தமிழ் தளத்தில் ரிலீஸாகவுள்ளது.

ரெஜினா கெஸன்ட்ராவுடன் இணைந்து நிவேதிதா சதீஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அன்யாஸ் டுட்டோரியல்  திரைப்படத்தை பாகுபலி திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஆர்கா மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் அன்யாஸ் டுட்டோரியல் திரைப்படத்தின் த்ரில்லானா ட்ரைலர் வெளியாகியுள்ளது. அந்த ட்ரைலர் இதோ…