பள்ளி மாணவியை வசியப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்த போலி சாமியார்!

பள்ளி மாணவியை வசியப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்த போலி சாமியார்! - Daily news

12 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை வசியப்படுத்தி, போலி சாமியார் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுங்குவார்சத்திரம் அடுத்த ராமானுஜபுரம் பகுதியில் பிரசாந்த் என்பவர், சாமியாராக இருக்கிறார்.

இந்த சாமியார், அந்த பகுதியில் உள்ள கோயில் அமர்ந்து குறி சொல்லி வந்திருக்கிறார். இதனால், இந்த சாமியார் அந்த பகுதி மக்களிடையே சற்று பிரபலமானவராக இருந்து வந்தார்.

இந்த சூழில் தான், அதே பகுதியை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி, தனது பெற்றோருடன் வசித்து வந்த நிலையில், அந்த மாணவி தனது தாயாருடன் சமீபத்தில் அந்த சாமியாரிடம் குறி கேட்பதற்காக சென்று உள்ளார். 

அப்போது, அந்த மாணவியை பார்த்ததுமே, சபலப்பட்ட அந்த சாமியார், அந்த பள்ளி மாணவியை எப்படியாவது அடைந்தே தீர வேண்டும் என்று திட்டம் போட்டதாகவும் கூறப்படுகிறது. 

அந்த சாமியார் திட்டமிட்டபடியே, அந்த மாணவியை அடிக்கடி அழைத்து பேசிய அந்த சாமியார், அந்த மாணவிக்கு அறிவுரை வழங்குவது போல், “நன்றாக படிக்க வைக்கிறேன்” என்று, சொல்லி பலவிதமான ஆசை வார்த்தைகளை தொடர்ச்சியாக கூறி வந்திருக்கிறார். 

இப்படியாக, தொடர்ந்து அந்த மாணவியிடம் ஆசை வார்த்தைகள் மூலம் பேசி, அந்த மாணவியை அந்த சாமியார் தன் வசியப்படுத்தி உள்ளார்.

இதனையடுத்து, அந்த 12 ஆம் வகுப்பு மாணவியும் அந்த சாமியாரை அடிக்கடி சந்தித்து பேசி வந்திருக்கிறார். 

அப்படியான தருணத்தில், அந்த பள்ளி மாணவியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்த அந்த சாமியார், “இதனை யாரிடமும் வெளியில் சொல்லக் கூடாது” என்றும், மிரட்டி அனுப்பி வைத்திருக்கிறார்.

மேலும், அந்த மாணவியை தன்னை பார்க்க அடிக்கடி வரவழைத்த அந்த சாமியார், தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் செய்து வந்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் அந்த சாமியாரின் பாலியல் தொல்லைகள் அதிகமானதால், வேறு வழியில்லாமல் இது குறித்து தனது பெற்றோரிடம் கூறி அந்த மாணவி அழுதிருக்கிறார். 

இதனைக்கேட்டு, கடும் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவியின் பெற்றோர், உடனடியாக ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்து உள்ளனர். 

இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், இது குறித்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அந்த சாமியார் மீதான பாலியல் புகார் உறுதியானது.

இதனையடுத்து, அந்த போலி சாமியார் பிரசாந்த் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்த போலீஸ், அவரை கைது செய்து அதிரடியாக சிறையில் அடைத்தனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment