தமிழில் இயக்குனர் வினு சக்கரவர்த்தி இயக்கத்தில் வண்டிச்சக்கரம் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான நடிகை சில்க் ஸ்மிதா தமிழ் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 450 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். குறிப்பாக பல திரைப்படங்களுக்கு டான்சராக ஆடும் சில்க் ஸ்மிதாவின் நடனம் இந்திய திரையுலகில் மிகப் பிரபலம்.

டான்சராக மட்டுமல்லாமல் நடிகையாகவும் பல திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை சில்க் ஸ்மிதா இயக்குனர் பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை இயக்குனர் பாலு மகேந்திராவின் மூன்றாம் பிறை, நீங்கள் கேட்டவை, தாலாட்டு கேட்குதம்மா, லயனம், லக்கி மேன் என பல திரைப்படங்களில் நடிகையாகவும் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இந்திய திரைத்துறையில் மிக குறுகிய காலத்தில் 450 திரைப்படத்திற்கு மேல் நடித்த நடிகை சில்க் ஸ்மிதா தனது 35வது வயதில் தற்கொலை செய்து கொண்டார். சில்க் ஸ்மிதாவின் மறைவிற்குப் பிறகு நடிகை வித்யாபாலன் நடிப்பில் பாலிவுட்டில் தி டர்டி பிக்சர் திரைப்படம் நடிகை சில்க்ஸ்மிதாவின் பயோபிக் திரைப்படமாக தயாரானதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை சில்க்ஸ்மிதாவின் புதிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. நடிகையாகவும் டான்சராகவும் மக்களை வசீகரித்த சில்க் ஸ்மிதா, பிரபல பாடகரும் நடிகருமான மலேசியா வாசுதேவன் உடன் இணைந்து மேடையில் சுராங்கனி பாடல் பாடும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. வைரலாகும் சில்க்ஸ்மிதா பாடும் வீடியோ இதோ…