இசை ரசிகர்களின் அபிமானம் பெற்ற தமிழ் சுயாதீன இசை கலைஞர்களில் மிக முக்கியமானவர் டிஜே அருணாச்சலம். லண்டன் வாழ் தமிழரான டிஜே அருணாச்சலம் பல சூப்பர்ஹிட் சுயாதீன பாடல்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தவர்.. மேலும் நடிகராக தமிழில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

முன்னதாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வெளிவந்து மெகா ஹிட்டான அசுரன் திரைப்படத்தில் நடிகர் தனுஷின் மகனாக முக்கிய கதாபாத்திரத்தில் டிஜே அருணாச்சலம் நடித்திருந்தார். தொடர்ந்து தற்போது சிலம்பரசன் மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் பத்து தல படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் டிஜே.

டிஜே அருணாச்சலத்தின் ஃபேவரட் ஆல்பமாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற முட்டு முட்டு ஆல்பத்தின் தொடர்ச்சியாக தற்போது முட்டு மு2 தயாராகிவருகிறது. குட்டி பட்டாசு & வாடா ராசா ஆகிய பாடல்களை இயக்கிய இயக்குனர் வெங்கி இயக்கத்தில் ஸ்டூடியோ FIVE புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்பாடலில் யோகி.பி மற்றும் விஜய் டிவி சிவாங்கி ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.

சாண்டி மாஸ்டர் நடன இயக்கத்தில் டிஜே, புகழ், யோகி.பி, ப்ரீட்டி முகுந்தன், ப்ரகயா ஆகியோர் நடித்துள்ளனர். ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்பாடலை இசையமைத்து எழுதி பாடி நடித்துள்ளார் டீஜே. இந்நிலையில் முட்டு மு2 பாடலின் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. விரைவில் இப்பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கலக்கலான அந்த ப்ரோமோ வீடியோ இதோ…