வெற்றிகரமாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது 24 மணி நேரமும் பிக்பாஸ் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியாக ஒளிபரப்பாக உள்ளது.  இன்று (ஜனவரி 30) மாலை 6.30 மணிக்கு கோலாகலமான தொடக்க விழாவுடன் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்குகிறது.

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இதுவரை நடைபெற்ற பிக் பாஸ் சீசன்களிலிருந்து போட்டியாளர்கள் மீண்டும் களமிறங்கவுள்ளனர். முந்தைய சீசன்களில் கைவிட்ட வெற்றிவாய்ப்பை இந்த முறை கைப்பற்றும் விதத்தில் அனைத்து போட்டியாளர்களும் செயல்படவுள்ள இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கட்டாயம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

முன்னதாக முதல் சீசனில் விளையாடிய சினேகன் ஜூலி 2-வது சீசனில் விளையாடிய தாடி பாலாஜி, 3-வது சீசனில் விளையாடிய வனிதா,  அபிராமி, 4-வது சீசனில் விளையாடிய சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் அனிதா சம்பத் ஆகியோர் களம் இறங்குவது ஏற்கனவே உறுதியான நிலையில், மீதமுள்ள போட்டியாளர்களுடன் சேர்த்து 14 போட்டியாளர்கள் கொண்ட பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் போட்டியாளர்களின் இறுதிப் பட்டியல் தற்போது வெளியானது. 

இதில்,

சினேகன் - சீசன் 1 
சுஜா வருணி - சீசன் 1 
ஜூலி - சீசன் 1 
தாடி பாலாஜி - சீசன் 2 
ஷாரிக் - சீசன் 2 
வனிதா விஜயகுமார் - சீசன் 3 
அபிராமி வெங்கடாச்சலம் - சீசன் 3 
அனிதா சம்பத் - சீசன் 4 
பாலாஜி முருகதாஸ் - சீசன் 4 
சுரேஷ் சக்கரவர்த்தி - சீசன் 4 
நிரூப்  நந்தகுமார் - சீசன் 5 
அபிநய் - சீசன் 5  
தாமரைச்செல்வி - சீசன் 5 
சுருதி - சீசன் 5

ஆகியோர் பிக்பாஸ் அல்டிமேட் போட்டியாளர்களாக களமிறங்குகின்றனர். இருப்பினும் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த நடிகை ஓவியா கலந்து கொள்ளாதது சிறிது ஏமாற்றத்தை அளித்தாலும் இருக்கும் இந்த 14 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நகரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.