நடிகர் சிலம்பரசன்T.R. கதாநாயகனாக நடித்த போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகி தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான நானும் ரவுடி தான் திரைப்படத்திற்குப் பிறகு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்த இயக்குனர் விக்னேஷ் சிவன் அடுத்து நடிகர் சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தை இயக்கினார்.

கடைசியாக நெட்ஃபிளிக்ஸில் நேரடியாக ரிலீசான பாவக் கதைகள் ஆன்தாலஜியில் விக்னேஷ் சிவன் இயக்கிய லவ் பண்ணா உட்ரனும் எபிசோட் அனைவரையும் ரசிக்க வைத்தது. அடுத்ததாக முதல் முறை நடிகர் அஜித் குமார் இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ள விக்னேஷ் சிவன் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அஜித்குமார் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த வரிசையில் முன்னதாக விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா மூவரும் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் இளையதிலகம் பிரபு, கலா மாஸ்டர் மற்றும்  பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

ரவுடி பிக்சர்ஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்நிலையில் முன்னதாக காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திலிருந்து வெளிவந்து ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று ட்ரெண்டான TWO TWO TWO பாடலின் GLIMPSE வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. டக்கரான அந்த GLIMPSE வீடியோ இதோ…