அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய வேண்டும் என்கிற ஆப்பிள் நிறுவனத்தின் அறிவிப்புக்கு ஊழியர்கள் கடும்  எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் பலரும் வேலையை ராஜினாமா செய்யப்போவதாகவும் எச்சரிப்பதாகவும் தெரிவித்தனர்.

கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றமடைந்து வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே இங்கிலாந்தில் ஆல்ஃபா, இந்தியாவில் டெல்டா, தென் ஆப்பிரிக்காவில் பீட்டா, பிரேசிலில் காமா என பல்வேறு வகைகளில் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்துள்ளது. அதற்கு ஒமிக்ரான் என பெயரிடப்பட்டது. 

இந்நிலையில் கொரோனா பெருந்தொற்று பரவத் தொடங்கியதை அடுத்து, ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ என்கிற கலாச்சாரம் உருவெடுத்தது. கடந்த 2 ஆண்டுகளாக  பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்களும் வீட்டிலிருந்தே பணிபுரிய  பழகிவிட்டனர். இதனால்  8 மணி நேர பணி நேரம் போக, பயண நேரம், தயாராகும் நேரம் போன்றவை மிச்சமாவதாக எண்ணுகின்றனர். அத்துடன் எப்போதும் குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடிவதாகவும்,  சிறிய சிறிய  அத்தியாவசிய வேலைகளை செய்ய ஒரு நாள் விடுப்பு எடுக்க வேண்டும் என்கிற அவசியமில்லை  போன்ற  பல்வேறு  சாதகமான காரணங்கள் ஊழியர்கள் கூறுகின்றனர்.

அதனைத்தொடர்ந்து உலகளவில் தற்போது கொரோனா பரவல் ஓரளவுக்கு  முடிவுக்கு வந்துள்ளது.  இதையடுத்து ஊழியர்கள் மீண்டும் அலுவலகத்திற்கு வந்து பணி செய்யுமாறு  நிறுவனங்கள் அறிவுறுத்தி வருகின்றன. ஆனால் இந்தப் பணுச்சூழலுக்கு  பழகிவிட்ட ஊழியர்கள் நிறுவனங்களின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதேநேரம் ஒரு சில நிறுவனங்கள்  வீட்டில் இருந்து பணி புரிவதால் உற்பத்தி திறன் பாதிக்கப்படுவதில்லை என்றும்,  அலுவலக  மாலாண்மை செலவுகள் இல்லை  என்பதாலும், வொர்க் ஃப்ரம் ஹோம் முறையையே தொடர்ந்து ஊக்குவித்து வருகின்றன.

ஆனால் இந்நிலையில்  இந்த இரண்டு முறையகளையும் கலந்த  ஹைபிரிட் வொர்க் முறையை ஆப்பிள் நிறுவனம் முன்வைக்கிறது அதாவது ஏப்ரல் 11 ம் தேதி முதல் மே 2ம் தேதி வாரத்தில் 2 நாட்கள் அலுவலகத்திலும், மீதமுள்ள நாட்கள் வீட்டிலிருந்து பணிபுரிய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது. அதன்பின்னர் மே 23-ம் தேதியில் இருந்து அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய வேண்டிய  நாட்கள் 3 நாட்களாக உயர்த்தப்படும் என்றும் அறிவித்தது.