பல கோடி ரசிகர்களின் அபிமானம் பெற்ற ஃபேவரட் ஹீரோவாகவும் சிறந்த நடிகராகவும் மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் நல்ல திரைப்படங்களை வழங்கி வருகிறார். முன்னதாக நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று சூப்பர் ஹிட்டானது.

இதனைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இயக்குனர் பாலா இயக்கத்தில் புதிய படத்தில் நடிகர் சூர்யா தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் தொடங்கப்பட்டு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தில் நடிகர் சூர்யா மீனவர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

அடுத்ததாக இந்திய சினிமாவின் குறிப்பிடப்படும் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக விளங்கும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ளார். சமீபத்தில் வாடிவாசல் திரைப்படத்தின் டெஸ்ட் ஷூட் சென்னையிலுள்ள ஈசிஆரில் செட் அமைக்கப்பட்டு நடைபெற்றது.

இந்நிலையில் நடிகர் சூர்யா அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் கூறும் புதிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. வயல்வெளிக்கு அருகில் சாலையில் காளை மாட்டுடன் நடந்தபடியே அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை சூர்யா பகிர்ந்து கொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோ இதோ…