பொண்ணும் - பொண்ணும் காதல் கல்யாணம்! திருமணத்தை அங்கீகரிக்க கோரி போர்கொடி!! “என்ன சொன்னது நீதிமன்றம்?”

பொண்ணும் - பொண்ணும் காதல் கல்யாணம்! திருமணத்தை அங்கீகரிக்க கோரி போர்கொடி!! “என்ன சொன்னது நீதிமன்றம்?” - Daily news

இரு பெண்கள் திருமணம் செய்துகொண்ட நிலையில், “தங்களது திருமணத்தை அங்கீகரிக்கக் கோரி” இரு பெண்கள் சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

“இது பெண்களின் உலகம்!”

அதனால் தான், பெண்ணும் - பெண்ணும் காதலித்து கல்யாணம் செய்த நிகழ்வுகள்” இந்தியாவில் தற்போது நிகழத் தொடங்கி இருக்கின்றன.

காலம் மாறிப்போச்சு என்பதற்கு, இரு பாலின திருமண முறையிலும் பொருந்திப் பார்க்க வேண்டிய காலகட்டம் இது என்று சொன்னால், அது மிகையல்ல. 

“இது, வளர்ச்சியா? அழிவின் தொடக்கமாக?” என்பதை அறிவியலாளர்களும், அறிஞர் பெருமக்களும் தான் பட்டிதொட்டி எங்கும் பட்டிமன்றம் நடத்தித் தீர்ப்புக் கூற வேண்டும். 

அந்த அளவுக்கு நாகரிகம் என்ற பெயரில், புதுமையான விசயங்கள் நிறையவே இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உட்புகுந்துகொண்டு, பண்பாட்டுப் பாரம்பரியத்தை மாற்றம் என்ற பெயரில் ஆட்டம் காண செய்துக்கொண்டிருக்கிறது. 

அதற்கு, உத்தரப் பிரதேச மாநிலத்தில் பொண்ணும் - பொண்ணும் காதல் கல்யாணம் செய்துகொண்ட சம்பவமே ஒரு சாட்சி!

அதாவது, உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது,  23 வயதான 2 இளம் பெண்கள், ஒரே கல்லூரியில் ஒன்றாக படித்து வந்து உள்ளனர்.

அப்போது, இந்த இரு பெண்களும் தோழிகளாக அறிமுகம் ஆன நிலையில், அவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டு, பின்னாளில் அது ஒர்பாலின காதலாக மாறியிருக்கிறது. 

இதனால், அந்த இரு பெண்களும் முறைப்படி திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். ஆனால், இரு பெண்கள் திருமணம் செய்வதை இந்த சமூகமும், தங்கள் பெற்றோரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என உணர்ந்த அந்த இரு படித்த பெண்களும், வேற ஒரு ஊருக்குச் சென்று ஒன்றாக வாழ்ந்து வந்து உள்ளனர். 

ஆனால், இந்த காதல் கல்யாண விஷயம் அந்தப் இரு பெண்களின் வீட்டாருக்கு தெரிய வந்த நிலையில், கடும் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் பெற்றோரில் ஒரு குடும்பத்தினர், “எங்கள் மகளை ஏமாற்றி, மற்றொரு பெண் அவரது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும், அவரை உடனே மீட்டுத் தர வேண்டும்” என்றும், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவாவது, கடந்த 6 ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, இதனை விசாரித்த நீதிபதி, சம்பந்தப்பட்ட பெண்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துபடி போலீசாருக்கு அதிரியாக உத்தரவிட்டார். அதன் படி, அந்தப் இரு பெண்கள் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர். 

அப்போது, அவர்கள் இந்த இரு பெண்கள் தரப்பில் வாதிடும்போது, “இந்து திருமணச் சட்டமானது 2 பேரின் திருமணத்தை தான் குறிக்கிறதே தவிர, அவர்கள் கட்டாயம் ஒரு ஆண் - ஒரு பெண்ணாக தான் இருக்க வேண்டும் எனக் கூறவில்லை” என்று, எடுத்துக்கூறப்பட்டது. 

அதே போல், “தன் பாலின திருமணத்துக்கு அந்த சட்டம் எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்றும், அதனால் மனம் ஒத்து நாங்கள் செய்து கொண்ட திருமணத்தை நீதிமன்றம் அங்கீகரிக்க வேண்டும்” என்றும், அந்த இரு பெண்களும் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு, உத்தரப் பிரதேச அரசு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். 

மேலும், “இந்து மதத்தின்படி திருமணம் என்பது, ஒரு ஆணுக்கும் - பெண்ணுக்கும் இடையே தான் நடைபெற வேண்டும். மற்ற நாடுகளில் வேண்டுமானால் திருமணம் ஒரு ஒப்பந்தமாக இருக்கலாம். ஆனால், இந்தியாவை பொறுத்தவரை திருமணம் ஒரு புனிதமான சடங்கு. அதை இவ்வாறு கொச்சைப்படுத்துவதை நீதிமன்றம் ஒருபோதும் ஏற்காது” என்று, அரசு வழக்கறிஞர் வாதிட்டார்.

இப்படியாக, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “மனுதாரர்கள் செய்து கொண்ட திருமணத்தை அங்கீகரிக்க முடியாது” என்று, அதிரடியாக உத்தரவிட்டார். இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

Leave a Comment