திரையுலகின் சிறந்த நடிகைகளுள் ஒருவர் ரகுல் ப்ரீத் சிங். தடையறத் தாக்க படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமாகியவர், தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று, NGK போன்ற படங்களில் நடித்து அசத்தினார். தமிழ் சினிமா மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என பிற மொழிப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். 

சில மாதங்களுக்கு முன் இவர் போதைப் பொருள் வழக்கில் சிக்கினார். அவருக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். தீபிகா படுகோன், சாரா அலி கான், ஷரத்தா கபூர் ஆகியோருடன் ரகுல் பிரீத் சிங்கும் விசாரிக்கப்பட்டார். ஆனால், தனக்கும் போதை பொருளுக்கும் தொடர்பில்லை என்றார் ரகுல்.

சமீபத்தில், மாலத்தீவு சென்றிருந்த அவர், அங்கிருந்து தினமும் சில புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்து வந்தார். அது வைரலானது. நடிகை ரகுல் பிரீத் இந்தியில் அர்ஜுன் கபூர் ஜோடியாக சர்தார் அண்ட் கிராண்ட்சன் என்ற படத்தில் நடிக்கிறார். இதன் ஷூட்டிங் முடிந்துவிட்டது.

அடுத்து பிரபல பாலிவுட் ஹீரோ அஜய் தேவ்கன் நடிக்கும் மே டே என்ற இந்திப் படத்தில் நடிக்கிறார். இதில், அமிதாப் பச்சன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இதை அஜய் தேவ்கன் இயக்கி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ரகுல் பிரீத், சமீபத்தில் அதில் இருந்து மீண்டார்.

இதையடுத்து மே டே ஷூட்டிங்கில் கலந்துகொண்டார். இந்தப் படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடந்து வருகிறது. இதையடுத்து அஜய்தேவ் ஜோடியாக தேங்க் காட் என்ற படத்திலும் சமீபத்தில் ஒப்பந்தம் ஆனார். இதன் ஷூட்டிங் விரைவில் தொடங்க இருக்கிறது. இதற்கு முன், அட்டாக் என்ற படத்தில் ஜான் அபிரகாம் ஜோடியாக நடித்து வருகிரார்.

இப்போது மற்றொரு பாலிவுட் படத்திலும் அவர் நடிக்கிறார். டாக்டர் ஜி என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், ஆயுஷ் குரானா ஹீரோவாக நடிக்கிறார். அனுபுதி காஷ்யப் இயக்கும் இந்தப் படத்தில் அவர் மருத்துவ மாணவியாக நடிக்கிறார். இந்தப் படத்தில் நடிப்பதை ஆர்வத்துடன் எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளார், ரகுல் பிரீத் சிங்.

கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார் ரகுல். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக நிறுத்துப்பட்டுள்ளது. விரைவில் இந்த படம் குறித்த தகவல்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்படுகிறது. 

இதைத்தொடர்ந்து ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் அயலான் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார் ரகுல். 24AM ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. கருணாகரன், இஷா கோபிகர், பாலசரவணன் ஆகியோர் உள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். சமீபத்தில் படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு பணிகளும் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.