A.R.முருகதாசின் உதவி இயக்குனராக இருந்து டிமாண்டி காலனி படம் மூலம் இயக்குனர் ஆனவர் அஜய் ஞானமுத்து.இந்த படம் மிக சிறந்த பேய் படம் என பலரது வரவேற்புகளை பெற்றது.இதனை தொடர்ந்து இவர் இயக்கிய இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாரா,அதர்வா,அனுராக் காஷ்யூப்,விஜய் சேதுபதி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.ஹிப்ஹாப் தமிழா இசையமைத்த இந்த படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து சீயான் விக்ரம் ஹீரோவாக நடிக்கும் கோப்ரா படத்தினை இயக்கிவந்தார்.இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.ஸ்ரீநிதி ஷெட்டி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.ஆனந்த் ராஜ்,ரோபோ ஷங்கர்,மியா ஜார்ஜ்,மிர்னாலினி ரவி,பூவையார்,கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

நட்சத்திர கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.கோப்ரா படம் ஆகஸ்ட் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி செம வைரலாகி வருகின்றன.இந்த படத்தின் ப்ரோமோஷன் வேளைகளில் படத்தின் நடிகர்கள் பல ஊர்களில் கலந்துகொண்டு வருகின்றனர்.

இயக்குனர் அஜய் ஞானமுத்து ஏன் கலந்துகொள்ளவில்லை என ரசிகர்கள் சிலர் கேள்வி எழுப்பி வந்தனர்,அதற்கு பதிலளித்த அஜய் ஞானமுத்து படத்தின் இறுதிக்கட்ட வேளைகளில் பிஸியாக இருந்ததால் இதுவரை கலந்துகொள்ள முடியவில்லை விரைவில் கலந்துகொள்வேன் என்று தெரிவித்துள்ளார்.