சினிமா ரசிகர்களின் ஃபேவரட் கதாநாயகர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் பிரபுதேவா. நடன இயக்குனர். நடிகர் மற்றும் இயக்குனர் என பன்முக தன்மை கொண்ட கலைஞராக ரசிகர்களை மகிழ்வித்து வரும் நடிகர் பிரபுதேவாவின் நடிப்பில் அடுத்தடுத்து திரைப்படங்கள் ரிலீஸாக தயாராகி வருகின்றன.

அந்த வகையில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இயக்குனர் சந்தோஷ்.பி.ஜெயக்குமார் இயக்கத்தில் மாற்றுத்திறனாளியாக மிரட்டலான கதாபாத்திரத்தில் பிரபுதேவா நடித்துள்ள பொய்க்கால்குதிரை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பல வித்தியாசமான கெட்டப்களில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள சைக்கோ த்ரில்லர் திரைப்படமான பஹீரா விரைவில் திரைக்கு வர உள்ளது.

முன்னதாக முதல்முறை நடிகர் பிரபுதேவா காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் பொன்மாணிக்கவேல் திரைப்படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வருகிற நவம்பர் 19ஆம் தேதி ரிலீசாகிறது. இந்நிலையில்  இயக்குனர் ஹரிகுமார் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள தேள் படத்தின் பாடல்கள் இன்று வெளியானது.

பிரபுதேவாவுடன் இணைந்து சம்யுக்தா, ஈஸ்வரி ராவ்,யோகிபாபு ஆகியோர் நடித்துள்ள இப்படத்திற்கு விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்ய, சி.சத்யா இசையமைத்துள்ளார். ஸ்டூடியோ கிரீன் சார்பில், K.E.ஞானவேல்ராஜா தயாரித்துள்ள தேள் படத்தின் பாடல்கள் அடங்கிய JUKEBOX வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.