கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மழை பாதிப்பால் உயிர்சேதம் குறைந்துள்ளதாக அமைச்சர் கே.கே. எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

kkssr சென்னை எழிலகத்தில் உள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது : காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது கரையை கடந்து இருக்கும் காரணத்தால் ஓரளவு மழை நின்றுள்ளது என்றும்,சென்னையில் தேங்கியுள்ள நீரை ராட்சத பம்புகள் மூலம் அகற்றப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் சென்னையில் 44 முகாம்ளில் -2699 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 28.64 நபர்களுக்கு உணவு வழங்கி உள்ளதாகவும், தமிழகத்தில் 259 முகாம்களில் 14,135 பேர் தங்க வைத்துள்ளோம் என்றும் கூறினார். 4 நாட்கள் மழையை வெகு சாமர்த்தியமாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் கையாண்டுள்ளார் என்றும், 2015ல் 124 பேர் மழை வெள்ளத்தில் உயிரிழந்தனர். ஆனால் இம்முறை 18 பேர் தான் உயிரிழந்தனர். அதேபோல் 2015-ல்  2218 கால்நடைகள் உயிரிழந்தது , இம்முறை 834 கால்நடைகள் மட்டுமே  இறந்துள்ளது என தெரிவித்தார்.

கடந்த முறை 31 ஆயிரம் குடிசைகள் சேதமானது , இம்முறை  மழையில் 2284  குடிசைக்ள் மட்டுமே  சேதம் அடைந்துள்ளன. மேலும் உயிரிழப்புகள் குறைந்தற்கு முதல்வரின் ஒரு மாத கால உழைப்பு தான் காரணம் என்றும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து அவர் கூறியதாவது : கொஞ்சம்  கொஞ்சமாக தண்ணீரை திறந்ததால் ஆற்றை விட்டு தண்ணீர் அதிகளவில் வெளியேறாமல் தடுத்து உள்ளோம் எனவும் ஓரிரு நாட்களில் சென்னையை முழுவதும் இயல்பு நிலைக்கு திருப்பி விடுவோம் என்றும்  அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் தெரிவித்தார்.

மேலும் பாதிக்கப்பட்ட பயிர்களை கண்டறிய நமது அமைச்சர்களை நேற்று இரவே அந்த பகுதிகளுக்கு முதல்வர் அனுப்பி வைத்துள்ளார். 33 சதவீதம் மேல் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு மட்டும் தான் நாம் இழப்பீடுகள் தருகிறோம் மேலும் பயிர் பாதிப்பு குறித்து அமைச்சர்கள் கணக்கு எடுத்துவருகின்றனர் என்று குறிப்பிட்ட அமைச்சர் இந்த மழையும் எங்களுக்கு ஒரு அனுபவ ரீதியான ஒரு பாடம் தான் என்றும் எங்களை பொறுத்தவரை ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி மக்கள் சேவைக்கு நாங்கள் எப்பொழுதும்  தயாராக உள்ளோம் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் தெரிவித்தார்.

இதையடுத்து, 2015 ல் உள்ள அதிகாரிகளை வைத்தே திறமையாக இம்முறை முதல்வர் செயல்பட்டுள்ளார். மேலும் மழை நின்ற பின் மத்திய குழு ஆய்வு செய்ய கோரிக்கை வைத்துள்ளோம் . அடுத்த புயல் வருவதற்கான தகவல் இதுவரை எந்த அறிவிப்பும் எங்களுக்கு வரவில்லை. ஒருவேளை அப்படி வந்தால் அதையும் நாங்கள் எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் கூறினார்.