விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான தொடர்களில் ஒன்று ராஜா ராணி.இந்த தொடரின் மூலம் பிரபலமானவர் மிகவும் பிரபலமானவர் ஹீரோயினாக நடித்த ஆல்யா மானசா.குறுகிய காலத்தில் இளைஞர்கள் மற்றும் பெண்களின் இதயங்களில் இடம்பிடித்துவிட்டார்.

இந்த தொடரில் ஹீரோவாக சஞ்சீவ் நடித்து வந்தார்.இவரும் இந்த தொடரின் மூலம் மிகவும் பிரபாலமானவராக மாறினார்,இவருக்கும் தனியொரு ரசிகர் பட்டாளமே இருந்தது.இவர்கள் ஜோடியாக மக்கள் மனதில் இடம்பிடிக்க இருவரும் நிஜத்திலும் ஜோடியாக மாறினர்.

இந்த தொடரில் ஹீரோவாக நடிக்கும் சஞ்சீவுக்கும் மானசாவுக்கும் காதல் மலர்ந்தது.இதனை அடுத்து இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.சஞ்சீவ் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காற்றின் மொழி என்ற தொடரில் நடித்து வருகிறார்.ஆல்யா மானசா சஞ்சீவ் தம்பதிக்கு சில மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது.இந்த குழந்தைக்கு ஐலா சையத் பெயரிட்டிருந்தனர்.

ராஜா ராணி தொடரை அடுத்து கல்யாணம்,குழந்தை என்று பிஸியாக இருந்தார் ஆல்யா.ஒரு சிறிய இடைவேளைக்கு பின் ராஜா ராணி 2 தொடரின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார் ஆல்யா.இந்த தொடரில் திருமணம் சீரியல் புகழ் சித்து ஹீரோவாக நடித்துள்ளார்.இந்த தொடர் தற்போது ஒளிபரப்பாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நிஹாரிகா நடித்து வருகிறார்.இவரது இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் சமீபத்தில் ஹேக் செய்யப்பட்டதாகவும் புது கணக்கை ரசிகர்கள் தொடரவும் அவரது கணவர் இயக்குனர் ரஜத் இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருந்தார்.தனது புதிய கணக்கில் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார் நிஹாரிகா.

இவர் தனது கணவருடன் ரொமான்டிக் லிப்லாக் அளிப்பது போல ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் தனது திருமண நாளையொட்டி கடந்த வருடம் பதிவிட்டிருந்தார்.இந்த புகைப்படம் செம ட்ரெண்ட் அடித்தது.இவரது இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டு பழைய புகைப்படங்கள் நீக்கப்பட்ட நிலையில் இந்த புகைப்படத்தை மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நிஹாரிகா.இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் வைரலாகி வருகிறது.

A post shared by Niharikka Rajith (@_niha_rikka_)