பாலிவுட் படத்தின் ஷூட்டிங்கை தொடங்கிய ராஷ்மிகா மந்தனா !
By Aravind Selvam | Galatta | March 05, 2021 19:37 PM IST
கீதா கோவிந்தம் என்ற படம் மூலம் மொத்த சவுத் இந்தியாவையும் தனது ரசிகர்களாக மாற்றியவர் ராஷ்மிகா மந்தனா.இந்த படத்தில் இவரது அழகிற்க்கும்,நடிப்பிற்கும் மயங்கிய ரசிகர்கள் இவரை கனவுக்கன்னியாக ஏற்றுக்கொண்டனர்.தமிழ்,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இவர் நடிக்கவில்லை என்றாலும் இவருக்கான வரவேற்பு அங்கும் அதிகமாகவே இருந்தது.
இதனை தொடர்ந்து இவர் மீண்டும் விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து டியர் காம்ரேட் படத்தில் கிரிக்கெட் விளையாடும் பெண்ணாக நடித்திருந்தார்.இந்த படத்தில் நடித்தற்காக பல விருதுகளை அள்ளிக்குவித்தார் ராஷ்மிகா.துறுதுறுவென இந்த படத்தில் இருக்கும் இவரது கேரக்டர் பலராலும் ரசிக்கப்பட்டது.எமோஷனல் காட்சிகளிலும் அசத்தியிருப்பார் ராஷ்மிகா.
இந்த படத்தை பரத் கம்மா இயக்கியிருந்தார்.ஜஸ்டின் பிரபாகரன் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரித்திருந்தனர்.ரசிகர்களிடமு
தமிழ் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற இவர் தற்போது கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் சுல்தான் படத்தில் நடித்து வருகிறார்.பொங்கலையொட்டி தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபுவுடன் இவர் நடித்த sarileru neekevaru படமும் நல்ல வரவேற்பை பெற்றது.இதனை தொடர்ந்து நிதின் நாயகனாக நடித்திருந்த பீஷ்மா படமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்கும் புஷ்பா படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் ஹீரோயினாக நடித்துள்ள சுல்தான் ஏப்ரல் 2ஆம் தேதி ரிலீசாகவுள்ளது.மிஷன் மஞ்சு என்ற படத்தில் ராஷ்மிகா ஹீரோயினாக நடிக்கிறார்.இந்த படத்தின் மூலம் பாலிவுட்டில் கால்பதிக்கிறார் ராஷ்மிகா.சமீபத்தில் இவர் நடித்த டாப் டக்கர் ஆல்பம் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
அல்லு அர்ஜுனின் புஷ்பா பட ஷூட்டிங்கில் விறுவிறுப்பாக பங்கேற்று வந்த இவர்,தற்போது தனது முதல் பாலிவுட் படமான மிஷன் மஞ்சு படத்தின் ஷூட்டிங்கை தொடங்கியுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
#MissionMajnu Day 1.. 🥰❤️@SidMalhotra @RonnieScrewvala @amarbutala #GarimaMehta @RSVPMovies @GBAMedia_Off #ShantanuBagchi @aseem_arora @Sumit_Batheja #ParveezShaikh @pashanjal @HasanainHooda pic.twitter.com/QvPAcc67YX
— Rashmika Mandanna (@iamRashmika) March 5, 2021
Karthi's Sulthan - New Song Video | Silambarasan TR | Rashmika Mandanna
05/03/2021 07:19 PM
Nadhaswaram serial actress gets married - wedding picture goes viral!
05/03/2021 06:35 PM
Bigg Boss sensation Kavin's new Tamil film - Lift Official Promo Video!
05/03/2021 06:00 PM