விரைவில் லாரன்ஸின் ருத்ரன் பட ஃபர்ஸ்ட்லுக் ! விவரம் இதோ
By Aravind Selvam | Galatta | March 24, 2022 18:27 PM IST
ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடைசியாக வெளியான காஞ்சனா திரைப்படத்தின் மூன்றாவது பாகம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்தது. அதைத்தொடர்ந்து அக்ஷய்குமார், கியாரா அத்வானி நடிப்பில் காஞ்சனா முதல் பாகத்தை இந்தியில் லட்சுமி பாம் என்ற டைட்டிலில் ரீமேக் செய்தார் ராகவா லாரன்ஸ். இத்திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.
இவர் அடுத்ததாக பொல்லாதவன் உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் படங்களை தயாரித்த ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கும் ருத்ரன் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளர் கதிரேசன் இயக்குனராக அவதாரம் எடுக்கிறார்.ஜி.வி.பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
ப்ரியா பவானி ஷங்கர் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.சரத்குமார்,நாசர்,பூர்ணிமா பாக்கியராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.K.P.திருமாறன் இந்த படத்திற்கு கதை, திரைக்கதை எழுதுகிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
படத்தின் மொத்த படப்பிடிப்பும் விரைவில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
#RudhranFirstLookSoon 🔥
— Five Star Creations LLP (@5starcreationss) March 24, 2022
Stay Tuned!#Rudhran #ருத்ரன் #RudhranFirstLook @offl_Lawrence @realsarathkumar @kathiresan_offl @gvprakash @priya_Bshankar @RDRajasekar #PoornimaBhagyaraj @kaaliactor @editoranthony @5starcreationss @teamaimpr pic.twitter.com/ALyS6BUSj3
OFFICIAL: Raghava Lawrence's Rudhran to release in theatres on April 14, 2022!
26/08/2021 12:49 PM
Interesting update on Raghava Lawrence's Rudhran - first glimpse released!
14/03/2021 06:52 PM