விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் பேவரைட் ரியாலிட்டி நிகழ்ச்சி அகதிகளும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மற்றொரு பரிமாணமாக தற்போது டிஸ்கிப்லஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இந்நிகழ்ச்சியை 24 மணி நேரமும் நேரலையாக ரசிகர்கள் கண்டுகளிக்க முடியும்.

இதுவரை நடைபெற்ற பிக்பாஸ் சீசன்களிலிருந்து  சினேகன், சுஜா வருணி, ஜூலி, தாடி பாலாஜி, ஷாரிக், வனிதா விஜயகுமார், அபிராமி வெங்கடாச்சலம், அனிதா சம்பத், பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்கரவர்த்தி & நிரூப்  நந்தகுமார், அபிநய், தாமரைச்செல்வி, சுருதி  ஆகியோர் ஹவுஸ் மேட்ஸ்களாக நுழைந்துள்ளனர்.

முன்னதாக உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய சிலம்பரசன் TR பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். முதல் வாரத்திலேயே எலிமினேட் ஆகி வெளியேறிய சுரேஷ் சக்கரவர்த்தி மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுக்க விஜய் டிவி பிரபலமும் நடிகருமான KPY சதீஷ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் புதிய வைல்ட் கார்டு போட்டியாளராக நுழைந்தார். 

கடந்த வார இறுதியில் அனிதா சம்பத் Evict ஆகி வெளியேறிய நிலையில் தற்போது சுரேஷ் சக்ரவர்த்தி தனது உடல்நலம் மற்றும் மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். இந்நிலையில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தற்போது விஜய் டிவி பிரபலமும் கைதி & மாஸ்டர் படங்களில் நடித்த பிரபல நடிகருமான தீனா நுழைந்துள்ளார். பிக்பாஸ் அல்டிமேட்டில் நுழைந்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியானது. அந்த ப்ரோமோ வீடியோ இதோ…