தனது ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் மெனக்கெட்டு படத்திற்கு படம் பல வெரைட்டியான கதைக் களங்களையும் கதாபாத்திரங்களையும் வழங்கி மக்களை மகிழ்வித்து வரும் நடிகர் சீயான் விக்ரம் நடிப்பில் அடுத்த வெளிவரவுள்ள திரைப்படம் கோப்ரா. இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் பல வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்துள்ள கோபுர திரைப்படம் வருகிற மே மாதம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் இந்திய திரை உலகில் இதுவரை இல்லாத மிகப் பிரம்மாண்ட படைப்பாக தயாராகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலன் என முக்கிய கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்துள்ளார். இந்த ஆண்டு 2022 செப்டம்பர் 30ஆம் தேதி பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது .

அடுத்ததாக  ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் சீயான் விக்ரம் நடிக்கவுள்ளார்.இதனிடையே இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சீயான் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடித்த மகான் திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 10-ம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் நேரடியாக ரிலீசாகி நல்ல வரவேற்பைப் பெற்றது . 

நடிகர்கள் பாபி சிம்ஹா, சிம்ரன், சனந்த் மற்றும் முத்துக்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள மகான் படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் மகான் படத்திலிருந்து MISSING ME பாடல் வீடியோ தற்போது வெளியானது. துருவ் விக்ரமின் மிரட்டலான நடிப்பில் வெளிவந்த அந்த பாடல் வீடியோ இதோ…