“கணவனாக இருந்தாலும் பாலியல் வன்கொடுமை, பாலியல் வன்கொடுமை தான்” என்று, மனைவி ஒருவர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்து உள்ளது.

கர்நாடக உயர்நீதிமன்றம் தான் இப்படி அதிரடியாக கூறி உள்ளது.

அதாவது, இந்தியாவில் கொரோனா ஊரடங்கு காலகட்டத்திற்குப் பிறகு, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்த வண்ணமே உள்ளதாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு கூறியிருந்தது.

அந்த வகையில், “இந்தியாவில் மனைவி உடன் கணவன் கட்டாய பாலியல் உறவில் ஈடுபடும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவுமு்” ஒரு குற்றச்சாட்டு அவ்வப்போது முன்வைக்கப்பட்டு கொண்டுதான் இருந்தது. 

அத்துடன், இது மாதிரியான குற்றங்கள் தொடர்பாக, “கணவன் மீது சம்மந்தப்பட்ட மனைவிமார்கள், காவல் நிலையத்தில் புகார் அளித்தாலும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தாலும், சட்டத்திற்கு உட்பட்டு அவர்களுக்கு சிறப்பு சலுகைகள் மூலமாக அவர்கள் தண்டனைகள் எதுவும் இன்றி தப்பித்துக்கொள்வதாகவும்” ஒரு குற்றச்சாட்டு, பெண்ணியம் பேசுபவர்களால் தொடர்ந்து முன் வைக்கப்பட்டு இருந்தது.

முக்கியமாக, “இந்திய தண்டனை சட்டம் 375 பிரிவின் படி, கணவன் ஒருவன் தனது மனைவியுடன் கட்டாய பாலியல் உறவில் ஈடுபட்டாலும், அந்த பெண்ணின் வயது 15 க்கு மேல் இருந்தால், அது பாலியல் வன்கொடுமைக்கான குற்றமாக கருத்தப்படாது” என்கிற கருத்தும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு கொண்டு இருந்தது.

இப்படியான, “சட்டப் பிரிவுகளில் உள்ள சிறப்பு சலுகையால், ஒரு மனைவியை அவரது கணவன் கட்டாய பாலியல் வன்கொடுமை செய்தாலும், அது குற்றமாக கருத்தப்படுவதில்லை” என்ற வாதமும் முன்வைக்கப்பட்டு கொண்டு இருந்தது.
  
இந்த நிலையில் தான், கர்நாடக மாநிலத்தில் பாதிக்கப்பட்ட ஒரு பெண், “எனது கணவன் என்னை பாலியல் அடிமை போன்று தொடர்ந்து நடத்தி வருகிறார் என்றும், கட்டாய உடல் உறவு மற்றும் இயற்கைக்கு மாறான பாலியல் உறவில் என்னை அவர் தொடர்ச்சியாக ஈடுபட கட்டாயப் படுத்துவதாகவும்” தனது கணவன் மீதே அரவது மனைவி, பாலியல் பலாத்கார வழக்கு தொடர்ந்திருந்தார். 

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், கர்நாடக மாநிலத்தின் கீழமை நீதிமன்றத்தில் இது குறித்து வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம், சம்மந்தப்பட்ட பெண்ணின் கணவன் மீது “பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்ய” நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. 

இந்த உத்தரவை அந்த பெண்ணின் கணவன், “கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு” செய்தார்.

இந்த வழக்கானது, நேற்றைய தினம், கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, “அந்த பெண்ணின் கணவன் மீது பதியப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்ய முடியாது” என்று, உயர்நீதிமன்றம் அதிரடியாக மறுத்துவிட்டது. 

அத்துடன், “கணவன் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு ரத்து செய்யப்படவில்லை என்ற போதிலும், இது மனைவியை கட்டாய பாலியல் வன்கொடுமை செய்வது குற்றம் என்ற கோணத்தில் பார்க்கப்படவில்லை” என்றும், நீதிமன்றம் விளக்கம் அளித்தது.

அதே போல், இந்த வழக்கு விசாரணையின் போது, “சட்டம் அனைவருக்கும் சமம் தான் என்றும், பாலியல் வன்கொடுமை பாலியல் வன்கொடுமை தான்” என்றும் நீதிபதி நாகபிரசன்னா, கருத்து தெரிவித்தார்.

மேலும், “கணவனாக இருக்கும் ஆண், மனைவியான உள்ள பெண் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்ந்தால், அது பாலியல் வன்கொடுமை தான் என்றும், பாலியல் வன்கொடுமையில் ஆணுக்கு தண்டனை உண்டு என்றால், அது பெண்ணுக்கும் பொருந்தும்” என்றும், நீதிபதி கருத்து தெரிவித்தார்.

குறிப்பாக, “ஒரு பெண் மீது மிருகத்தனமான கொடூரத்தை கட்டவிழ்த்து விட ஆண்களுக்கு எந்தவிதமான சிறப்பு சலுகைகளோ, உரிமையோ கிடையாது” என்றும், நீதிபதி கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.