“தமிழகம் ஏழை மாநிலம் அல்ல, வளர்ந்த மாநிலம்” என்று, தமிழக சட்டப் பேரவையில் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், பல்வேறு காரணங்களை முன்வைத்தார். 

தமிழ்நாடு சட்டப் பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரின் கேள்வி நேரம் இன்றைய தினம் நடைபெற்று முடிந்து உள்ளது.

அதன்படி, தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்துக்கு இன்றைய தினம் பதில் அளித்து பேசிய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,  “ஏழை எளிய மக்களுக்காக நமது தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது” என்று, குறிப்பிட்டார்.

“கொள்கை அடிப்படையில் ஆட்சி செய்கிறோம் என்றும், நாங்கள் அரசியல் லட்சியவாதிகள் என்றும், கடந்த அதிமுக ஆட்சியில் நிதி நிலைமை மிகவும் மோசமாக இருந்தது” என்றும், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், சுட்டிக்காட்டினார்.

அத்துடன், சட்டப் பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் கடந்த 3 நாள்களாக நடைபெற்று வந்த நிலையில், தமிழக சட்டப் பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் 3 வது நாளாக இன்றும் நடைபெற்றது. 

அப்போது பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், “தமிழகம் ஏழை மாநிலம் அல்ல, வளர்ந்த மாநிலம்” என்று, பகிரங்கமாகவே அறிவித்தார்.

இது குறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பல்வேறு தகவல்களை சட்டப் பேரவையில் அடிக்கினார். 

அதன் படி,

- தமிழகத்தில் உயர்கல்வி பெற்றவர்கள் விகிதம் 52 சதவீதம் ஆகும். 

- தமிழகத்தில் 75 சதவீதத்திற்கு மேல் சொந்த வீட்டில் வசித்து வருகின்றனர். 

- தமிழகத்தில் 66 சதவீதம் பேரின் வீடுகளில் இருசக்கர வாகனம் இருக்கிறது. 

- தமிழக அரசுக்கு நியமிக்கப்பட்ட பொருளாதார ஆலோசனை குழு ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் பணியாற்றுகிறது. 

- அனைவரின் கருத்துக்கும் மதிபளித்து தமிழ்நாடு அரசு செயல்படுகிறது.

என்று, பல்வேறு புள்ளி விபரங்களை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், சட்டப் பேரவையில் முன்வைத்தார்.

மேலும், “தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் தமிழகம் முன்மாதிரி மாநிலமாக இருக்க வேண்டும் என்கிற அடிப்படையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், செயல்பட்டு கொண்டிருக்கிறார் என்றும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு முழுமையான உரிமை பெற்று தரப்படும்” என்று, சுட்டிக்காட்டிய அவர், “தமிழ்நாடு ஏழை மாநிலம் அல்ல, வளர்ந்த மாநிலம்” என்றும், அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், “மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்படுகிறது என்றும், கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை முடிவாகிவிட்டது” என்றும், நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறினார்.