'SPOOF படம் கிடையாது.. மாநாடு 2 என சொல்லலாம்!'- விஷாலின் மார்க் ஆண்டனி குறித்து SJசூர்யா கொடுத்த சூப்பர் அப்டேட்! வீடியோ இதோ

விஷாலின் மார்க் ஆண்டனி குறித்து SJசூர்யா கொடுத்த சூப்பர் அப்டேட்,Vishal in mark antony not a spoof movie sj suryah special interview | Galatta

தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராகவும் மக்களின் மனம் கவர்ந்த நடிகராகவும் வலம் வரும் SJ.சூர்யா அவர்கள் நடிப்பில் அடுத்தடுத்து அசத்தலான திரைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களை மகிழ்விக்க காத்திருக்கின்றன. அந்த வகையில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து SJ.சூர்யா நடித்திருக்கும் ஜிகர்தண்டா DOUBLE X திரைப்படம் இந்த 2023 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. அடுத்ததாக பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ராம்சரண் கதாநாயகனாக நடிக்க உருவாகி வரும் கேம் சேஞ்சர் படத்தில் SJ.சூர்யா வில்லனாக நடித்துள்ளார். மேலும் நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் அவரது 50வது படமான D50 படத்திலும் SJ.சூர்யா நடிக்க இருப்பதாக தெரிகிறது. இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனிடையே நடிகர் விஷாலுடன் இணைந்து சூர்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் தான் மார்க் ஆண்டனி. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள மார்க் ஆண்டனி திரைப்படத்தில் ரிது வர்மா, இயக்குனர் செல்வராகவன், சுனில், நிழல்கள் ரவி, Y.gee.மகேந்திரன், ரெட்டின் கிங்ஸ்லி, அபிநயா மற்றும் மலேசிய நடிகர் DSG உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மினி ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளர் வினோத்குமார் தயாரித்துள்ள மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவில், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்ய ஜீவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மார்க் ஆண்டனி திரைப்படம் வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வெளியீடாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரதியாக பேட்டி கொடுத்த எஸ் ஜே சூர்யா அவர்கள் நம்மோடு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார் அந்த வகையில் பேசும் போது, “மார்க் ஆண்டனி திரைப்படத்தை பார்க்கும் போது டைம் மெஷின் வருகிறது செல்வராகவன் சார் வருகிறார். நீங்கள் வருகிறீர்கள் பயங்கர அட்ராசிட்டியாக இருக்கிறது. விஷால் அவர்களே இதுவரை இது மாதிரி நடித்து நாங்கள் பார்த்தது கிடையாது இதில் ஏதேதோ செய்திருக்கிறார் குரல் மாற்றி பேசி இருக்கிறார் தாடி வைத்திருக்கிறார் விஷால் அவர்களை தாடியோடு பார்த்ததே கிடையாது!” என சொன்ன போது, “அது ரொம்ப FUN-ஆக இருந்தது உண்மையாகவே இது எல்லாமே ஆதிக் ரவிச்சந்திரன் சாருடைய எனர்ஜி தான்” என்றார். தொடர்ந்து அவரிடம் பேசும் போது, “இந்த படம் பார்க்கும் போது ஹாலிவுட்டில் எல்லாம் “மீட் தி ஸ்பார்ட்டன்ஸ்” படம் மாதிரியாக அவர்களது படங்களை அவர்களே SPOOF படம் மாதிரி கிண்டல் அடிப்பார்கள் அது மாதிரி இந்த படத்திலும் SPOOF விஷயங்கள் இருக்கும் என எதிர்பார்க்கலாமா?” எனக் கேட்டபோது, “SPOOF கிடையாது ஆனால் SPOOF எவ்வளவு சந்தோஷம் கொடுக்குமோ? அதற்கு சமமான சந்தோஷத்தை இந்த படமும் கொடுக்கும். இது ரொம்பவும் FREAKYயான படம். ஒரு மாதிரி புது Genre அப்படி ஒன்றை உருவாக்கி விட்டார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். மாநாடு 2 என சொல்லலாம்.” என தெரிவித்து இருக்கிறார். மேலும் மார்க் ஆண்டனி படம் குறித்து பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட SJ.சூர்யா அவர்களின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.