'சில்லு கருப்பட்டி' & 'ஏலே' இயக்குனர் ஹலிதா ஷமீமின் அடுத்த அற்புத படைப்பாக வரும் மின்மினி! ஃபர்ஸ்ட் லுக் உள்ளே

இயக்குனர் ஹலிதா ஷமீமின் மின்மினி பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு,halitha shameem in minmini movie first look poster out now | Galatta

இதுவரை இந்திய சினிமா வரலாற்றில் யாரும் செய்திடாத அளவிற்கு ஏன் யாரும் யோசிக்காத அளவிற்கு மிகப்பெரிய முயற்சியை மேற்கொண்டு இயக்குனர் ஹலிதா ஷமீம் உருவாக்கி இருக்கும் மின்மினி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியானது. கடந்த 2014 ஆம் ஆண்டு வெளிவந்த பூவரசம் பீப்பீ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் இயக்குனர் ஹலிதா ஷமீம். பின்னர் தனது அடுத்த படமாக அவர் உருவாக்கிய சில்லு கருப்பட்டி திரைப்படம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தது. அதைத் தொடர்ந்து இயக்குனர் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ஏலே படமும் நல்ல வரவேற்ப்பும் பாராட்டுகளும் பெற்றது. தனக்கென தனி பாணியில் தொடர்ந்து மனித உணர்வுகளோடு உரையாடும் அழகான படைப்புகளை கொடுத்து வரும் இயக்குனர் ஹலிதா ஷமீம் கடந்த 2022 ஆம் ஆண்டு நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளிவந்த புத்தம் புது காலை விடியாதா ஆந்தாலஜி வெப்சீரிஸில் லோனர்ஸ் எனும் எபிசோடை இயக்கியிருந்தார். 

இந்த வரிசையில் அடுத்ததாக ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளிவர இருக்கும் மிக முக்கிய திரைப்படம் தான் மின்மினி. இந்திய திரை வரலாற்றிலேயே குறிப்பிடப்படும் திரைப்படமாக அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கும் மின்மினி திரைப்படத்தை தனது முதல் படமான பூவரசம் பீப்பீ படத்திற்கு பிறகு 2015 ஆம் ஆண்டில் தொடங்கி அதன் முதல் பாதி படப்பிடிப்பை நிறைவு செய்து விட்டார். அதன் பின்னர் ஏழு ஆண்டுகள் கழித்து கடந்த 2022 ஆம் ஆண்டு படத்தின் இரண்டாவது பாதியை படமாக்கினார் ஹலிதா ஷமீம். படத்தில் சிறு வயதில் இருக்கும் கதாபாத்திரங்கள் வளர்ந்த பிறகு நடக்கும் கதை களத்திற்கு இரு வெவ்வேறு நடிகர்களை பயன்படுத்தாமல் குழந்தை நட்சத்திரங்களாக 2015ல் நடித்த நடிகர்களையே ஏழு ஆண்டுகளுக்கு பின் அந்த கதாபாத்திரங்களில் இயக்குனர் ஹலிதா ஷமீம் நடிக்க வைத்திருக்கிறார். இந்த பெரும் முயற்சி ஒட்டுமொத்த சினிமா வட்டாரத்தின் கவனத்தையும் மின்மினி படத்தின் மீது திருப்பி இருக்கிறது. 

7 ஆண்டுகள் காத்திருந்து ஹலிதா ஷமீம் மின்மினி படத்தை உருவாக்கியது போல முன்னதாக ஹாலிவுட்டில் BOYHOOD என்ற படத்திற்காக இயக்குனர் ரிச்சர்ட் லிங்க்லேட்டர் 12 காத்திருந்து படமாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. தளபதி விஜயின் லியோ படத்தின் ஒளிப்பதிவாளரும் இந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவருமான மனோஜ் பரமஹம்சா மின்மினி திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் மகள் கதீஜா ரஹ்மான் மின்மினி திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இந்த நிலையில் மின்மினி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளிவந்துள்ளது. ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…
 

Here is the FL poster of #Minmini. Thank you, each one of you who is looking forward to the film. pic.twitter.com/r3lqk3Dc8i

— Halitha (@halithashameem) September 12, 2023