ஹன்சிகா - சாந்தனு - பிக்பாஸ் முகென் இணைந்த MY3 வெப் சீரிஸ்... ரசிகர்களின் கவனம் ஈர்த்த கலக்கலான ட்ரெய்லர் இதோ!

ஹன்சிகா - சாந்தனு - பிக்பாஸ் முகெனின் MY3 வெப்சீரிஸ் ட்ரெய்லர் வெளியீடு,hansika shanthanu mugen in my3 web series trailer out now | Galatta

இயக்குனர் M.ராஜேஷ் இயக்கத்தில் ஹன்சிகா, சாந்தனு மற்றும் முகென் இணைந்து நடித்திருக்கும் MY3 வெப்சீரிஸின் ட்ரெய்லர் வெளியானது. தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக தனக்கென தனி பாணியில் அட்டகாசமான என்டர்டெய்னிங் படங்களை கொடுத்து வருபவர் இயக்குனர் M.ராஜேஷ். ஜீவா நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான சிவா மனசுல சக்தி படம் மூலம் இயக்குனராக களம் இறங்கிய M.ராஜேஷ் தொடர்ந்து பாஸ் என்கிற பாஸ்கரன் , ஒரு கல் ஒரு கண்ணாடி என மெகா ஹிட் படங்களை கொடுத்தார். மேலும் சிவகார்த்திகேயனின் திரை பயணத்தில் மிக முக்கிய படமாக அமைந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்திற்கு வசனங்களையும் இயக்குனர் M.ராஜேஷ் எழுதி இருக்கிறார். அதன்பிறகு இயக்குனர் M.ராஜேஷ் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய கவனத்தை ஈர்க்கத் தவறின. 

இந்த வரிசையில் தற்போது முதல்முறையாக வெப் சீரிஸில் களம் இறங்கி இருக்கும் இயக்குனர் M.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சயின்ஸ் பிக்சன் காமெடி என்டர்டெய்னர் வெப் சீரிஸ் தான் MY3. பிரபலமான கொரியன் வெப் சீரிஸான ஐ அம் நாட் எ ரோபோட் என்ற வெப் சீரிஸின் ரீமேக்காக MY3 வெப் சீரியசை இயக்குனர் M.ராஜேஷ் இயக்கியிருக்கிறார். ரொமான்டிக் காமெடி சயின்ஸ் பிக்சன் வெப் சீரியஸாக வர இருக்கும் MY3 வெப் சீரிஸில் ஹன்சிகா மோட்வானி, சாந்தனு பாக்கியராஜ் மற்றும் பிக் பாஸ் மோகன் ராவ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ஜனனி ஐயர், விஜே பார்வதி, அனீஸ் குருவிலா, சுப்பு பஞ்சு, தங்கதுரை, ராமர், அறந்தாங்கி நிஷா, சக்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த MY3 வெப் சீரிஸ்க்கு S.கணேசன் இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள MY3 வெப் சீரிஸ்க்கு ஆஷிஷ் ஜோசப் இசை அமைத்திருக்கிறார்.

மனிதர்கள் விரல் பட்டால் பெரிய பாதிப்பு ஏற்படக்கூடிய வித்தியாசமான அலர்ஜியால் பாதிக்கப்பட்ட ஒரு நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டராக முகென் இருக்கிறார்.  ரோபோடிக் இன்ஜினியராக வரும் சாந்தனு ஒரு ரோபோட்டை உருவாக்குகிறார். தனது எக்ஸ் கேர்ள் ஃபிரண்டான ஹன்சிகாவின் உருவத்திலேயே ஒரு ரோபோட்டை உருவாக்கி அதை முகென் ராவ்க்கு கொடுப்பதற்காக தயார் செய்யும் போது அந்த ரோபோட்டில் பிரச்சனை ஏற்பட்டு செயல் இழக்கிறது. இருப்பினும் ரோபோட்டை கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் ரோபோட்டுக்கு பதிலாக தனது எக்ஸ் கேர்ள் ஃபிரண்ட்டான ஹன்சிகாவையே கொடுக்கிறார். அதன் பிறகு நடக்கக்கூடிய சுவாரசியமான சம்பவங்களை கோர்த்து கலகலப்பான சயின்ஸ் எக்ஸிபிஷன் காமெடி வெப் சீரிஸாக இயக்குனர் M.ராஜேஷ் இந்த MY3 வெப் சீரிஸை உருவாக்கி இருக்கிறார். வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் MY3 வெப் சீரிஸ் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிலையில் MY3 வெப் சீரிஸின் ட்ரெய்லர் தற்போது வெளியானது. கலக்கலான அந்த ட்ரெய்லர் இதோ…