ஜிகர்தண்டா DOUBLEX: ராகவா லாரன்ஸ் & SJ சூர்யாவின் மாஸ் ஆக்சன் பட ஸ்பெஷல் ட்ரீட்... யுவன் & சந்தோஷ் நாராயணனின் தீக்குச்சி பாடல் இதோ! 

ஜிகர்தண்டா DOUBLEX பட தீக்குச்சி பாடல் வெளியீடு,ragava lawrence sj suryah in jigarthanda doublex thee kuchi song | Galatta

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் SJ.சூர்யா இணைந்த நடித்துள்ள ஜிகர்தண்டா DOUBLE X திரைப்படத்தின் தீக்குச்சி பாடல் வெளியானது. தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த யுவன் சங்கர் ராஜா - சந்தோஷ் நாராயணன் கூட்டணி தற்போது ஜிகர்தண்டா DOUBLE X படத்தில் அசத்தலான ட்ரீட்டாக தீக்குச்சி பாடலை கொடுத்திருக்கிறது. ஏற்கனவே ஜிகர்தண்டா படத்தில் இருந்து வெளிவந்த DOUBLE X "மாமதுரை" பாடல் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ராகவா லாரன்ஸின் ஸ்டைலான நடனத்தில் வந்திருக்கும் இந்த தீக்குச்சி பாடலும் கவனத்தை ஈர்த்துள்ளது இந்த பாடலுக்கு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் பேட்ட படத்தின் உள்ளாலா உள்ளாலா, ஜகமே தந்திரம் படத்தின் ரகிட்ட ரகிட்ட பாடல்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றிய பாபா பாஸ்கர் மாஸ்டர் நடன இயக்கம் செய்திருக்கிறார். முத்தமிழ் மற்றும் பூவன் மதீசன் இணைந்து எழுதி இருக்கும் இந்த பாடலை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசையில் யுவன் சங்கர் ராஜா - சந்தோஷ் நாராயணன் உடன் இணைந்து பாடி இருக்கிறார்.

தனக்கென தனி ஸ்டைலில் பல்வேறு விதமான கதைக்களங்களில் தரமான படைப்புகளை வழங்கி தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக வலம் வரும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தனது ஜிகர்தண்டா திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2வது பாகமான ஜிகர்தண்டா DOUBLE X திரைப்படத்தை தற்போது கார்த்திக் சுப்பராஜ் உருவாக்கி இருக்கிறார். இந்த 2023 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக ஜிகர்தண்டா DOUBLE X திரைப்படம் வருகிற நவம்பர் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. தென்னிந்திய சினிமாவில் மிக முக்கிய நடிகர்களாகவும் இயக்குனர்களாகவும் திகழும் ராகவா லாரன்ஸ் மற்றும் SJ.சூர்யா இருவரும் இணைந்து இந்த ஜிகர்தண்டா DOUBLE X திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். முதல்முறையாக ராகவா லாரன்ஸ் மற்றும் SJ.சூர்யா இணைந்து நடித்திருக்கும் இந்த ஜிகர்தண்டா திரைப்படத்தில் நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும் ஷைன் டேம் சாக்கோ, சத்யன், அரவிந்த் ஆகாஷ், இளவரசு மற்றும் பவா செல்லதுரை ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

ஜிகர்தண்டா DOUBLE X படத்திற்கு திரு என்கிற திருநாவுக்கரசு அவர்களின் ஒளிப்பதிவில், ஷபிக் முஹம்மத் அலி படத்தொகுப்பு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்க விவேக் பாடல்களை எழுதி இருக்கிறார். திலீப் சுப்பராயன் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார். பக்கா ஆக்சன் காமெடி படமாக கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் இரண்டாவது படமாக வெளிவந்த ஜிகர்தண்டா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து ரசிகர்களுக்கு மீண்டும் ஜிகர்தண்டா மாதிரியான இன்னொரு பெரிய விருந்தை கொடுக்க முடிவு செய்த இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜிகர்தண்டா திரைப்படம் 8 ஆண்டுகளை நிறைவு செய்த தருணத்தில் ஜிகர்தண்டா 2 படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். ஜிகர்தண்டா படத்தைப் போலவே ஒரு இயக்குனருக்கும் கேங்ஸ்டருக்கும் இடையிலான அட்டகாசமான ஆக்சன் படமாக தயாராகி இருக்கும் ஜிகர்தண்டா DOUBLE X ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெளிவந்திருக்கும் ஜிகர்தண்டா DOUBLE X திரைப்படத்தின் தீக்குச்சி பாடல் இதோ…