'அன்பை வாரி வழங்குங்கள்!'- ஸ்டைலாக ஆட்டோ ஓட்டி ஆயுத பூஜை & விஜயதசமி கொண்டாடிய 'லெஜண்ட்' சரவணன்! வைரல் வீடியோ

ஆட்டோ தொழிலாளர்களோடு ஆயுத பூஜை கொண்டாடிய லெஜண்ட் சரவணன்,legend saravanan celebrated ayutha pooja with auto drivers | Galatta

ஆட்டோ தொழிலாளர்களோடு இணைந்து ஆட்டோ ஓட்டி லெஜண்ட் சரவணன் அவர்கள் ஆயுத பூஜை கொண்டாடியிருக்கிறார். உழைத்தால் யாரும் உயர்ந்திடலாம் ஆனால் அந்த உயரத்தை வேறு யாரும் நிர்ணயித்து விட முடியாது நாம் தொட வேண்டிய, தொடக்கூடிய உயரம் இமயமாகவும் இருக்கலாம் அதை தாண்டியும் இருக்கலாம் இன்று மிகப்பெரிய நம்பிக்கையை தமிழ்நாட்டு மக்கள் மனதில் விதைத்த பலரின் மிக முக்கியமானவர் லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும் தமிழ் சினிமாவின் பிரபல நட்சத்திரமான லெஜண்ட் சரவணன் அவர்கள். தற்போதைய ட்ரெண்டிங்கில் பல முன்னணி நிறுவனங்களை சார்ந்த தொழிலதிபர்கள் தங்களது நிறுவனங்களின் விளம்பரப் படங்களில் தாங்களே நடிக்கும் புதிய ட்ரெண்டை தொடங்கி வைத்தவர் லெஜண்ட் சரவணன் அவர்கள்.

தமிழ் மக்கள் மனதில் தன்னம்பிக்கைக்கு அடையாளமாகவும் கடின உழைப்பிற்கு உருவமாகவும் திகழும் லெஜண்ட் சரவணன் சமீபத்தில் தமிழ் திரை உலகில் கதாநாயகனாகவும் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்தார். தி லெஜன்ட் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக லெஜண்ட் சரவணன் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். முன்னணி நட்சத்திர நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆவது போல் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் கடந்த ஆண்டு ஜூலை 28ம் தேதி பேன் இந்தியா படமாக ரிலீஸான தி லெஜண்ட் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும் மிகப்பெரிய அளவில் இருந்தது. அடுத்ததாக லெஜண்ட் சரவணன் நடிக்கும் புதிய படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர்.  

முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் 77 வது சுதந்திர தினத்தை லெஜண்ட் சரவணன் அவர்கள் குழந்தைகளோடு கொண்டாடிய லெஜண்ட் சரவணன் அவர்கள், பள்ளி செல்லும் பிஞ்சு குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி சுதந்திர தினத்தை  கொண்டாடினார். மேலும் இந்த கொண்டாட்டத்தின் போது, தனது அடுத்த படத்திற்கான அப்டேட்டை பகிர்ந்து கொண்டார். ஒரு நல்ல கதைக்காக காத்திருந்த லெஜண்ட் சரவணன் அவர்களுக்கு அந்த கதை கிடைத்திருப்பதாகவும் விரைவில் அதனை திரைப்படமாக உருவாக்கி ரசிகர்களுக்கு விருந்து வைக்க காத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது ஆட்டோ தொழிலாளர்களுடன் இணைந்து ஆயுத பூஜையை லெஜண்ட் சரவணன் அவர்கள் கொண்டாடியிருக்கிறார்.

இந்த விழாவில் பேசிய போது, “இந்த விஜயதசமி நன்னாளில் எனது உடன்பிறப்புகளோடு இந்த விழாவில் கலந்து கொண்டு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு எப்போதும் இரண்டு விஷயங்கள் மிகவும் பிடிக்கும் அதில் ஒன்று நன்றாய் ஓடி ஆடி உழைப்பது இன்னொன்று அன்பை வாரி வழங்குவது. ஏனென்றால் இன்று நாம் எதை விதைக்கிறோமோ அதுதான் நமக்கு மீண்டும் பன்மடங்காய் திரும்பி வரும் அப்படி பார்க்கும்போது நீங்கள் அன்பை வாரி வழங்குங்கள் அது பன்மடங்காக உங்களை தேடி மீண்டும் திரும்ப வரும்” என பேசினார். தொடர்ந்து ஆட்டோ தொழிலாளர் ஒருவர் ஆசையாக, “எங்களோடு ஆட்டோவில் ஒரு ரவுண்ட் வர வேண்டும்” என கேட்க, அதற்கு பதிலளித்த லெஜண்ட் சரவணன், “கட்டாயம் வருகிறேன் ஆனால் ஆட்டோ நான் தான் ஓட்டுவேன்” என செம ஸ்டைலாக ஆட்டோ ஓட்டி ஆயுத பூஜை & விஜயதசமியை உழைக்கும் கரங்களான ஆட்டோ தொழிலாளர்களோடு கொண்டாடினார். இந்த அட்டகாசமான நிகழ்வின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ இதோ…