"எனக்கு பயம் வந்துருச்சு"- தங்கலான் படப்பிடிப்பில் நடந்த விபத்து குறித்தும் சீயான் விக்ரமின் கமிட்மெண்ட் குறித்தும் மனம் திறந்த பா.ரஞ்சித்! வைரல் வீடியோ

தங்கலான் படப்பிடிப்பில் விக்ரமின் கமிட்மெண்ட் குறித்து மனம் திறந்த பா.ரஞ்சித்,Pa ranjith about chiyaan vikram commitment in thangalaan | Galatta

நடிகர் சீயான் விக்ரமின் தங்கலான் படம் வருகிற 2024 ஜனவரி 26 ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த நிலையில் நேற்று நவம்பர் 1ம் தேதி நடைபெற்ற தங்கலான் டீசர் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் பா.ரஞ்சித் தங்கலான் படப்பிடிப்பில் நடந்த விபத்து குறித்தும் சீயான் விக்ரமின் கமிட்மெண்ட் குறித்தும் பேசினார். அப்படி பேசும் போது, 

“படப்பிடிப்பில் ஒரு முறை ஒரு விபத்து ஆனது. விலூவில் அடிபட்டுவிட்டது எலும்பு முறிவு என்று சொன்னார்கள். அதன் பிறகு ஒரு மாதம் எந்த பணியும் செய்யாமல் இருக்க வேண்டும் என சொன்னார்கள் ஓய்வெடுத்து வந்தார். அதன் பிறகு எனக்கு ஒரு ஸ்டண்ட் காட்சி செய்து முடிக்க வேண்டும். நான் ஒவ்வொரு முறையும் ஸ்டண்ட் இயக்குனரிடம் சொல்லிவிட்டு மிகவும் சுயநலமாக இருப்பேன் சினிமாவில் நான் மிகவும் சுயநலமானவன். ஆனால் பயங்கர கூலாக இருப்பது போலு காட்டிப்பேன். யாரையும் கஷ்டப்படுத்தாமல் வேலை வாங்க வேண்டும் என்று முயற்சி செய்வேன். ஒரு நாள் காலையில் ஆரம்பித்து 4 மணி வரைக்கும் தொடர்ச்சியாக நடித்துக் கொடுத்து கொண்டே இருக்கிறார். எனக்கு தெரியும் அவரால் இந்த ஒரு சில ஷாட்டுகள் பண்ண முடியாது என்று, ஆனால் நான் சும்மா கேட்பேன் என்ன சார் இதை பண்ணுகிறீர்களா என்று... நாம் கேட்டதும் அவரும் பண்ணுகிறேன் என்பார். அவ்வளவுதான் ஆனால் செய்து முடித்த பிறகு அந்த ஷாட்டிலேயே ஒரு பிரச்சனை இருக்கும். அதனால் அவர் காயப்பட்டு இருப்பார். நான் போய் கேட்பேன் என்ன சார் வலிக்கிறதா என்று... வலிக்குது என்ன சொல்லுவார் ஒன் மோர் போலாமா சார் என்று கேட்பேன் நம்மை நம்பி வந்திருக்கிறார் நாம் எப்படியாவது இந்த கேரக்டரை உண்மையாக மாற்ற வேண்டும் அதை உண்மையாக மாற்றுவதற்கு பல சவால்கள் இருக்கிறது அந்த சவால்கள் தான் FILM MAKING. அதற்கு தன்னை பயங்கரமாக அர்ப்பணிக்க கூடிய ஒரு நடிகராக நான் விக்ரம் சாரை பார்க்கிறேன். மேலும் விக்ரம் சார் அன்று காயப்பட்ட பிறகு அன்று இரவு படப்பிடிப்பு, அன்று சில சண்டைக் காட்சிகள் பிளான் செய்தோம். அந்த ஒவ்வொரு ஷாட்டிலும் நான் மானிட்டரை மட்டும்தான் பார்ப்பேன் அவரை பார்க்கவே மாட்டேன். வெறும் மானிட்டரை மட்டும் பார்த்துவிட்டு தலையை குனிந்து கொண்டிருப்பேன் யாராவது உதவி இயக்குனர்களை மட்டும் அழைத்து போய் அவருக்கு ஏதாவது ஆகிவிட்டதா போய் பாருங்கள் என்று சொல்வேன். வந்து இல்லை அவர் ஓகே சொல்கிறார் என்று சொல்வார்கள். ஓகே மாஸ்டர் இன்னொரு ஒன் மோர் போலாம் ரெடி ரெடி என்று சொல்வேன். அன்று இரவு தான் யோசித்தேன் எதற்காக…  ஒரு கேரக்டரை ரொம்ப ரியலிஸ்டிக்காக காட்டுவதற்கு ஒரு நடிகர் தன்னை எவ்வளவு என்று தள்ள வேண்டும் என்றால் அதற்கு அவர் அந்த கேரக்டரை எவ்வளவு நம்பி இருக்க வேண்டும். அவரது எவ்வளவு நம்பி இருப்பார் அந்த நம்பிக்கை எனக்கு ஒரு பெரிய HOPE கொடுத்தது. அந்த HOPE தான் தங்கலானாக வந்திருப்பதாக நான் நினைக்கிறேன். ஒரு தலை சிறந்த நடிகர் அவருக்கு இருக்கும் கமிட்மெண்டை பார்த்து எனக்கு ஒரு பயம் வந்துவிட்டது. அதுதான் இன்னும் நன்றாக பணியாற்றுவதற்கு ஒரு உத்வேகத்தையும் கொடுத்தது. அவர் நிறைய கஷ்டப்பட்டாரா என்றால் நிறைய கஷ்டப்பட்டு இருக்கிறார். எதற்கு என்றால் அந்த கேரக்டரை ரொம்ப ரியலிஸ்டிக்காக காட்டுவதற்காக உண்மையான நடிகராக பார்த்தேன்.” என தெரிவித்திருக்கிறார். இன்னும் பல முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்ட இயக்குனர் பா.ரஞ்சித் பேசிய வீடியோ இதோ...