"இதுதான் முதல் தடவை!"- பா.ரஞ்சித்தின் தங்கலான் படத்தில் இருக்கும் சிறப்பம்சம் குறித்து சீயான் விக்ரம் பகிர்ந்த ருசிகர தகவல்! வீடியோ உள்ளே

தங்கலான் பட சிறப்பம்சம் குறித்து சீயான் விக்ரம் பகிர்ந்த ருசிகர தகவல்,chiyaan vikram shared about live sonud in thangalaan teaser launch | Galatta

இயக்குனர் பா ரஞ்சித் அவர்களின் இயக்கத்தில் முதல் முறையாக நடித்திருக்கும் நடிகர் சீயான் விக்ரம் அவர்கள் இந்த தங்கலான் திரைப்படத்திற்காக முதல் முறை லைவ் சவுண்ட் செய்திருப்பதாக இன்று நவம்பர் 1ம் தேதி நடைபெற்ற தங்கலான் டீசர் வெளியிட்டு விழாவில் தெரிவித்திருக்கிறார். சீயான் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, ஹரி கிருஷ்ணன், டேனியல் கால்டகிரோன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள தங்கலான் திரைப்படத்திற்கு கிஷோர் குமார் ஒளிப்பதிவில், செல்வா.RK படத்தொகுப்பு செய்ய, GV.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இன்று காலை வெளிவந்த தங்கலான் திரைப்படத்தின் மிரட்டலான டீசர் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்ததோடு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் இந்த டீசர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சீயான் விக்ரம், தங்கலான் திரைப்படத்திற்காக முதல் முறை “லைவ் சவுண்ட்” செய்திருப்பதாகவும் அதில் இருக்கும் கடினங்கள் குறித்தும் விவரமாக பகிர்ந்து கொண்டார். அப்படி பேசும் போது

“இதுதான் முதல் தடவை நான் லைவ் சவுண்ட் பண்ணுகிறேன்.  நாம் எப்போதும் டபிங்கில் போய் சில விஷயங்களை செய்வோம் நான் எப்போதும் டப்பிங் செய்வதனால் எனக்கு அது மிகவும் பிடிக்கும். இங்கே லைவ் சவுண்ட் என்பதால் நம்முடைய ஒவ்வொரு உச்சரிப்பில் இருந்து எல்லாமே சிரமப்பட்டு பண்ண வேண்டும். சரியாகவும் பண்ண வேண்டும். அந்த காலத்தில் அவர்கள் பேசிய விதம். தமிழ் சுத்தமாக இருக்க வேண்டும். அந்த கதாபாத்திரங்களுக்காக சில நேரங்களில் குரல் மாற்ற வேண்டும். சில சமயங்களில் குரல் மாற்றி பேசும் போது முக பாவங்கள் ஒத்துப்போகாது. அதுவும் வேண்டும் இதுவும் வேண்டும் முன்பெல்லாம் நடித்துவிட்டு டப்பிங்கில் பார்த்துக் கொள்ளலாம் என இருப்போம். அந்நியன் மற்றும் ஐ படங்களில் பார்த்தீர்கள் என்றால் டப்பிங் இல் சில விஷயங்களை மாற்றி இருப்போம். இதில் அப்படி பண்ண முடியாது. நான் ரஞ்சித்திடம் கேட்டேன் “இது பண்ணித்தான் ஆக வேண்டுமா?” என்று, “இல்ல சார் இது பிடித்திருக்கிறது இதை பண்ணலாம்” என்றார். அது ரொம்பவும் கஷ்டமாக இருந்தது. ஏனென்றால் எல்லோரும் மைக் உடன் இருப்போம். இன்னொரு விஷயம் என்னவென்றால் எல்லாமே கிட்டத்தட்ட சிங்கிள் ஷாட். ஒரு சீன் எடுத்தீர்கள் என்றால் இரண்டு ஷாட்டில் முடியும் இல்லையென்றால் ஒரு ஷாட்டில் முடியும். அப்படி என்றால் ஒரு கேமரா நகர்ந்து கொண்டே இருக்கும். கேமரா என்னிடமிருந்து ஹரி இடம் சென்று பசுபதி பார்வதி என எல்லாரிடமும் போகும் எல்லாருடைய நடிப்பும் சரியாக இருக்க வேண்டும். அதேபோல் பின்னால் ஒரு 200 - 300 பேர் இருப்பார்கள் அவர்களுடைய விஷயங்களும் சரியாக இருக்க வேண்டும் அப்படி இல்லை என்றால் மீண்டும் திரும்ப செய்ய வேண்டும்.”  என பேசி இருக்கிறார்.

3D தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் தங்கலான் திரைப்படத்தை  PAN INDIA படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியிட  பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர். வருகிற 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதி குடியரசு தின வெளியீடாக தங்கலான் திரைப்படம் மிகப் பிரம்மாண்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தங்கலான் டீசர் வெளியிட்டு விழாவில் சீயான் விக்ரம் பேசிய அந்த வீடியோ இதோ...