தளபதி விஜயின் லியோ படத்திற்காக லோகேஷ் கனகராஜ் திருப்பதியில் பாத யாத்திரை... வசனகர்த்தா ரத்னகுமார் பகிர்ந்த டிரெண்டிங் வீடியோ உள்ளே!

தளபதி விஜயின் லியோ படத்திற்காக லோகேஷ் கனகராஜ் பாத யாத்திரை,lokesh kanagaraj visits thirupathi for thalapathy vijay in leo movie success | Galatta

தளபதி விஜயின் லியோ திரைப்படத்தின் வெற்றிக்காக வேண்டிக்கொண்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திருப்பதியில் பாதயாத்திரை மேற்கொண்டு இருக்கிறார். தளபதி விஜய் ரசிகர்களும் அனைத்து சினிமா ரசிகர்களும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் தளபதி விஜயின் லியோ திரைப்படம் அடுத்த வாரம் ரிலீஸ் ஆகிறது. நிச்சயமாக இந்த முறை ஆக்ஷனில் புதிய ட்ரீட் கொடுக்க இருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் லியோ திரைப்படத்தின் அத்தனை அதிரடி விஷயங்களிலும் மிகவும் மெனக்கட்டு பணியாற்றி இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன. மாஸ்டர் படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருக்கும் இந்த லியோ திரைப்படத்திற்கான திரைக்கதை வசனங்களில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களுடன் மேயாத மான், ஆடை, குளுகுளு படங்களின் இயக்குனர் ரத்னகுமார் மற்றும் ஜில் ஜங் ஜக் படத்தின் இயக்குனர் தீரஜ் வைத்தி இருவரும் பணியாற்றியுள்ளனர். 

மிரட்டலான பக்கா ஆக்சன் பிளாக் திரைப்படமாக வெளிவர இருக்கும் இந்த லியோ திரைப்படத்தில் நடிகை திரிஷா கதாநாயகியாக நடித்திருக்கிறார். கில்லி திருப்பாச்சி ஆதி மற்றும் குருவி ஆகிய திரைப்படங்களுக்கு பிறகு கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பின் தளபதி விஜய் உடன் இணைந்து திரிஷா லியோ திரைப்படத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா அவர்களின் அட்டகாசமான ஒளிப்பதிவில் பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்திருக்கும் லியோ திரைப்படத்திற்கு சதீஷ்குமார் கலை இயக்குனராக பணியாற்ற தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றியிருக்கிறார். அன்பறிவு மாஸ்டர்களின் அதிரடியான ஆக்ஷனில் உருவாகி இருக்கும் இந்த லியோ திரைப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசை அமைத்திருக்கிறார்.

வருகிற அக்டோபர் 19ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக வெளிவர இருக்கும் லியோ திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு ஒவ்வொரு இடங்களிலும் தொடங்கப்பட, தற்போது ரசிகர்கள் முன்பதிவில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே லியோ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இந்திய சினிமா வரலாற்றில் மிகப்பெரிய கவனத்தை ஏற்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக தனது இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இண்டஸ்ட்ரி ஹிட்டாக 500 கோடி பிளாக்பஸ்டர் கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் லியோ திரைப்படத்தில் 1000 கோடி என்ற இலக்கை தொடுவாரா எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனிடையே தனது ஒவ்வொரு திரைப்படங்களும் வெளிவருவதற்கு முன்பு பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு சென்று வருவதை வழக்கமாக வைத்திருக்கும் லோகேஷ் கனகராஜ் தற்போது திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பாதயாத்திரை சென்று இருக்கிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இயக்குனர் ரத்னகுமார் மற்றும் குழுவினர் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பாதயாத்திரை செல்லும் வீடியோவை வசனகர்த்தாவும் இயக்குனருமான ரத்னகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், "கழுதைப்புலி வருவதனால் இந்த பாதுகாப்போடு அழைத்துச் செல்கிறார்கள்" என்றும் பேசியிருக்கிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திருப்பதியில் பாதயாத்திரை செல்லும் அந்த வைரல் வீடியோ இதோ…
 

 

View this post on Instagram

A post shared by Rathna Kumar (@mr.rathna)