தமிழ் திரை உலகின் குறிப்பிடப்படும் தயாரிப்பாளர்களில் ஒருவரான தயாரிப்பாளர் ஐசரி.K.கணேஷ் அவர்கள் தனது வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் தொடர்ந்து தரமான திரைப்படங்களை தமிழ் திரை உலக ரசிகர்களுக்கு வழங்கி வருகிறார். அந்த வகையில் தேவி, போகன், கோமாளி, LKG, எனை நோக்கி பாயும் தோட்டா, மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட திரைப்படங்கள் இவரது தயாரிப்பில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

கடைசியாக இவரது தயாரிப்பில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன்.TR கதாநாயகனாக நடித்து வெளிவந்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆனது. தொடர்ந்து வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இரண்டாவது பாகமும் விரைவில் தயாராகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து ஜோஸ்வா - இமைப்போல் காக்க மற்றும் சுமோ ஆகிய திரைப்படங்கள் விரைவில் ரிலீஸாக காத்திருக்கும் நிலையில், LKG மற்றும் மூக்குத்தி அம்மன் புகைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக RJ.பாலாஜி - ஐசரி.K.கணேஷ் அவர்கள் கூட்டணியில் தயாராகியுள்ள திரைப்படம் சிங்கப்பூர் சலூன்.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜூங்கா ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் கோகுல் இயக்கத்தில் தயாராகி இருக்கும் சிங்கப்பூர் சலூன் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அடுத்ததாக ஐசரி.K.கணேஷ் அவர்கள் தயாரிக்கும் புதிய படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி கதாநாயகனாக நடிக்க உள்ளார்.

வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனராகவும் தமிழ் திரை உலகின் முக்கிய தயாரிப்பாளராகவும் விளங்கும் ஐசரி.K.கணேஷ் அவர்கள் விளையாட்டிலும் மிகுந்த ஆர்வம் உடையவர். அந்த வகையில் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவராக விளங்கும் ஐசரி.K.கணேஷ் அவர்கள் இந்திய அளவில் டேக்வாண்டா கூட்டமைப்பின் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

டேக்வாண்டா கூட்டமைப்பின் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட தயாரிப்பாளர் ஐசரி.K.கணேஷ் அவர்கள், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட குஜராத் மாநிலத்தை சேர்ந்த சஞ்சய் சுப்ரியாவை வீழ்த்தி பிரம்மாண்டமாக வெற்றி பெற்று டேக்வண்டா கூட்டமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் இவரது அணியிலிருந்து செயலாளர், பொருளாளர், துணைத் தலைவர்கள் என அனைத்து பதவிகளில் போட்டிவிட்டவர்களும் தேர்தல் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பு தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட Dr. ஐசரி K. கணேஷ் வெற்றி!

Dr. ஐசரி K. கணேஷ் அவர்கள் தன்னை எதிர்த்து போட்டியிட்ட குஜராத் மாநிலத்தை சேர்ந்த திரு. சஞ்சய் சுப்பிரிய அவர்களை வீழ்த்தி அமோக வெற்றி பெற்றார்.

Congrats @IshariKGanesh Sir pic.twitter.com/SCpJmTyZ4y

— Done Channel (@DoneChannel1) November 14, 2022