2022 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் மெகா ஏலம் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளதை முன்னிட்டு சிஎஸ்கே அணியின் கேப்டன் எம். எஸ். தோனி தற்போது சென்னைக்கு வந்து உள்ளார்.

டெஸ்ட் போட்டி, 50 ஓவர்கள் கொண்ட ஒரு நாள் போட்டிகள் என்பது முற்றிலுமாக சுருங்கி ஐபிஎல் என்ற பெயரில் 20 ஓவர்கள் போட்டிகள் இந்தியாவில் பிரபலமாக தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கேப்டன் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

இதனையடுத்து, தற்போது 2022 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகளை நடத்த அனைத்து விதமான ஏற்பாடுகளும் முழு வீச்சில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

அந்த வகையில், இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதற்கு முன்பாக, இந்த முறை மெகா ஏலம் நடைபெற இருக்கின்றன. 

அந்த வகையில், இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எந்தெந்த வீரர்களை சென்னை அணிக்கா எடுக்கலாம் என்பது குறித்து ஆலோசித்து பேச்சு வார்த்தை நடத்தி முடிவு செய்வதற்காக, எம்.எஸ். தோனி நேற்று இரவு சென்னை வந்திருக்கிறார்.

தோனியை பொறுத்தவரை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெறும் கேப்டனாக மட்டும் இல்லாமல், “சென்னை அணியில் எந்த வீரர்களை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல முக்கிய முடிவுகளையும், கடந்த பல ஆண்டுகளாக தோனி எடுத்து வருகிறார். 

இவற்றுடன், சென்னை அணியானது இந்த நடப்பாண்டில் தோனி, ஜடேஜா, ருதுராஜ் கைக்வாட், மொயின் அலி ஆகிய 4 வீரர்களையும் தக்க வைத்துக்கொண்டிருக்கிறது. 

இதில், ஜடேஜா 16 கோடி ரூபாய்க்கும், தோனி 12 கோடி ரூபாய்க்கும், மொயின் அலி 8 கோடி ரூபாய்க்கும், ருதுராஜ் கைக்வாட் 6 கோடி ரூபாய்க்கும் இந்த ஆண்டு ரீடெய்ன் செய்யப்பட்டு இருக்கிறார்கள். 

இதன் மூலமாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஏலத்தில் 48 கோடி ரூபாய் தற்போது மீதம் இருக்கிறது.

இந்த நிலையில் தான், ஐபிஎல் மெகா ஏலம் தொடர்பாக சென்னை அணி நிர்வாகத்துடன், பேச்சு வார்த்தை நடத்துவதற்காகவே அணியின் கேப்டன் தோனி, தற்போது சென்னைக்கு வந்திருக்கிறார்.

சென்னை வந்த கேப்டன் தோனிக்கு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகிகள் சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தற்போது, அது தொடர்பான போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.